லாக்டவுன் இருக்காது.. ஆனால் பேரணிகள், போராட்டங்களுக்கு அனுமதி கிடையாது… கர்நாடக அரசு

லாக்டவுன் இருக்காது.. ஆனால் பேரணிகள், போராட்டங்களுக்கு அனுமதி கிடையாது… கர்நாடக அரசு

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மார்ச் 29ம் தேதி முதல் 15 தினங்களுக்கு போராட்டம் மற்றும் பேரணிகளுக்கு அனுமதி கிடையாது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

நம் நாட்டில் கொரோனா வைரஸ் 2வது அலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிராவில் அதன் தாககம் அதிகமாக உள்ளது. இதனால் அம்மாநிலம் தற்போது இரவு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் மீண்டும் லாக்டவுனை அமல்படுத்த தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது. மகாராஷ்டிராவுக்கு அடுத்தப்படியாக கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் எடுத்துள்ளது.

லாக்டவுன் இருக்காது.. ஆனால் பேரணிகள், போராட்டங்களுக்கு அனுமதி கிடையாது… கர்நாடக அரசு
கொரோனா வைரஸ் பரிசோதனை

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,792 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது என கர்நாடக அரசு நேற்று தெரிவித்தது. கொரோனா வைரஸ் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனையடுத்து கர்நாடக பா.ஜ.க. அரசு புதிய கட்டுப்பாடுகளை நேற்று அறிவித்தது. இன்று முதல் (மாா்ச் 29) 15 நாட்களுக்கு எந்த போராட்டங்கள், பேரணிகள் அனுமதிக்கப்படாது.

லாக்டவுன் இருக்காது.. ஆனால் பேரணிகள், போராட்டங்களுக்கு அனுமதி கிடையாது… கர்நாடக அரசு
மாணவர்கள்

அடுக்குமாடி குடியிருப்பில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே இன்று முதல் பார்ட்டி மற்றும் கொண்டாட்டங்கள் அனுமதிக்கப்படாது. லாக்டவுன் இருக்காது. மாஸ்க் அணியாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறந்து இருக்கும். பள்ளிகளை மூடுவது குறித்து நாங்கள் பரிந்துரைகளை எடுத்துள்ளோம். 15 நாட்களில் தேர்வு முடிந்து விடும் அதன் பிறகு அது குறித்து ஆய்வு செய்யப்படும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.