கொரோனாவுக்கு எதிராக நாடே போராடும் வேளையில், சிலைகளை நிறுவுவதில் ஆர்வம் காட்டி வரும் கர்நாடக பா.ஜ.க. அரசு

கொரோனாவுக்கு எதிராக நாடே போராடும் வேளையில், சிலைகளை நிறுவுவதில் ஆர்வம் காட்டி வரும் கர்நாடக பா.ஜ.க. அரசு

கர்நாடகாவின் தலைநகரமான பெங்களூரை நிறுவியர் நரபிரபு கெம்பேகவுடா. விஜய பேரரசின்கீழ் தலைவராக இருந்த கெம்பேகவுடா 1537ல் பெங்களூரு நகரை நிறுவினார். கர்நாடக மக்களால் இன்றும் போற்றப்படுகிறார். கெம்பேகவுடா சிலை வைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் 108 அடி உயரத்தில் வெண்கலத்தில் கெம்பேகவுடா சிலையை சர்வதேச விமான நிலையத்தின் முன் நிறுவ கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனாவுக்கு எதிராக நாடே போராடும் வேளையில், சிலைகளை நிறுவுவதில் ஆர்வம் காட்டி வரும் கர்நாடக பா.ஜ.க. அரசு

இது தொடர்பாக கர்நாடக துணை முதல்வர் அஷ்வத்நாரயணன் கூறியதாவது: கெம்பே கவுடாவின் 511வது பிறந்தநாள் விழா இம்மாதம் 27ம் தேதி வருகிறது. அன்று இதற்கான கட்டுமான பணிகள் தொடங்குவதற்கான பூஜைகள் நடக்கும். சிலை மாடல் தயாராகி விட்டது, கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஒப்புதல் அளித்த பிறகு இறுதி செய்யப்படும். சிலை நிறுவும் பணிகள் ஒரு வருடத்தில் முடிக்கப்படும். சிலையை உருவாக்க ரூ.66 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தத்தில் இந்த திட்டத்துக்கு ரூ.80 கோடி செலவாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பெங்களூருவில் உள்ள காந்திஜி சிலையை வடிவமைத்த பிரபல கலைஞர் அனில் மற்றும் ராம் சுடர்தான் கெம்பேகவுடா சிலையையும் கட்ட போகிறார். இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என கடந்த சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது.

கொரோனாவுக்கு எதிராக நாடே போராடும் வேளையில், சிலைகளை நிறுவுவதில் ஆர்வம் காட்டி வரும் கர்நாடக பா.ஜ.க. அரசு

இம்மாத தொடக்கத்தில் கர்நாடக அரசு, குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை உள்ளது போல் பெங்களூருவில் முத்யாலயா நீர்வீழ்ச்சி அருகே சுவாமி விவேகானந்தருக்கு 120 அடி உயரத்தில் சிலை வைக்கப்போவதாக தகவல் தெரிவித்துள்ளது. நாடே கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த போராடி வரும் நிலையில் கர்நாடக அரசு சிலைகளை நிறுவதில் ஆர்வம் காட்டி வருவது பெரும் சர்ச்சையையும், விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.