கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்க கூடாது..தனியார் மருத்துவமனைகளுக்கு கர்நாடக அரசு எச்சரிக்கை

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்க கூடாது..தனியார் மருத்துவமனைகளுக்கு கர்நாடக அரசு எச்சரிக்கை

கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் இருந்தது, இந்நிலையில் சமீபகாலமாக பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து கொரோனா வைரஸ் அதிகமாக உள்ள பகுதிகளை சீல் வைத்து லாக்டவுன் விதிமுறைகளை கர்நாடக அரசு தீவிரமாக பரவி வருகிறது. இந்த சூழ்நிலையில் கொரோனா வைரஸ் நோயாளிகள் அல்லது கொரோனா வைரஸ் அறிகுறி உள்ள நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுப்பதாக தகவல் வெளியானது.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்க கூடாது..தனியார் மருத்துவமனைகளுக்கு கர்நாடக அரசு எச்சரிக்கை

இதனையடுத்து முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. அரசு இது தொடர்பாக உத்தரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா வைரஸ் நோயாளிகள் அல்லது கொரோனா வைரஸ் அறிகுறி உள்ள நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுக்க கூடாது. அரசின் இந்த உத்தரவை மீறினால் பேரிடர் நிர்வாக சட்டம் 2005 மற்றும் கர்நாடகா தனியார் மருத்துவமனை நிறுவனங்கள் சட்டம் 2017 ஆகியவற்றில் உள்ள பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்க கூடாது..தனியார் மருத்துவமனைகளுக்கு கர்நாடக அரசு எச்சரிக்கை

நம் நாட்டில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் கர்நாடகா 12வ இடத்தில் உள்ளது. நேற்றைய நிலவரப்படி, கர்நாடகாவில் இதுவரை மொத்தம் 11,923 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7,287 பேர் குணம் அடைந்துள்ளனர். 4,445 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 191 பேர் தொற்று நோய்க்கு பலியாகி உள்ளனர்.