புது காரு வாங்க போறீங்களா?.. முதல்ல கார் நிறுத்த இடம் இருக்கா?.. ஆதாரத்தை காட்டுங்க.. கர்நாடக அரசு அதிரடி

புது காரு வாங்க போறீங்களா?.. முதல்ல கார் நிறுத்த இடம் இருக்கா?.. ஆதாரத்தை காட்டுங்க.. கர்நாடக அரசு அதிரடி

கார் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி இருக்கிறது என்பதற்கான ஆதாரத்தை வாகன உரிமையாளர் காட்டினால் மட்டுமே புது வாகனத்தை பதிவு செய்ய அனுமதிப்பது குறித்து கர்நாடக அரசு யோசனை செய்து வருகிறது.

கர்நாடகாவில் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. பெங்களூரு சாலைகளில் நெரிசலை நீக்கும் நோக்கில் அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த செவ்வாய்க்கிழமையன்று முதல்வர் பி.எஸ். எடியூரப்பா, பார்க்கிங் கொள்கை 2.0 உருவாக்குவது தொடர்பாக மூத்த அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை செய்தார்.

புது காரு வாங்க போறீங்களா?.. முதல்ல கார் நிறுத்த இடம் இருக்கா?.. ஆதாரத்தை காட்டுங்க.. கர்நாடக அரசு அதிரடி
பி.எஸ்.எடியூரப்பா

பெங்களூருவில், புதிதாக கார் வாங்கியர்கள், வாகனத்தை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி இருக்கிறது என்பதற்கு பொறுப்பு கடிதத்தை வழங்கினால் மட்டும் புது வாகனத்தை பதிவு செய்ய அனுமதி அளிப்பது குறித்து மாநில அரசு ஆய்வு செய்து வருகிறது. இது தொடர்பாக மூத்த அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் வரைவு கொள்கையை இறுதி செய்து அதை அமைச்சரவை முன் ஒப்புதலுக்காக வைக்குமாறு தலைமை செயலாளர் டி.எம். விஜயபாஸ்கருக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

புது காரு வாங்க போறீங்களா?.. முதல்ல கார் நிறுத்த இடம் இருக்கா?.. ஆதாரத்தை காட்டுங்க.. கர்நாடக அரசு அதிரடி
ஸ்மார்ட் பார்க்கிங்

பார்க்கிங் கொள்கை சட்டமாக அமலுக்கு வந்தால், பெங்களூருவில் இனி பார்க்கிங் வசதி இருந்தால் மட்டுமே புதிய வாகனத்தை வாகன உரிமையாளர்கள் வாகனத்தை பதிவு செய்ய முடியும். தேவையில்லாமல் சாலைகளில் நிறுத்தப்படுவது தவிர்க்கப்படும். மேலும் பார்க்கிங் கட்டணம் வாயிலாக கர்நாடக அரசுக்கும் வருவாய் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.