இன்று முகக் கவச தினம் (Mask Day) கொண்டாடும் கர்நாடக அரசு – நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்பு

 

இன்று முகக் கவச தினம் (Mask Day) கொண்டாடும் கர்நாடக அரசு – நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்பு

பெங்களூரு: இன்று முகக் கவச தினத்தை (Mask Day) கர்நாடக அரசு கொண்டாடி வருகிறது.

கொரோனா தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்த முகக் கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கர்நாடக அரசு இன்று முகக் கவச தினத்தை கொண்டாடுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த முகக் கவசம் அணிவது, சமூக விலகலை கடைபிடிப்பது போன்ற விழிப்புணர்வுகளை மக்களுக்கு கொண்டு செல்ல இந்த நிகழ்வு மாநிலம் முழுவதும் பல இடங்களில் நடைபெற்று வருகிறது.

இன்று முகக் கவச தினம் (Mask Day) கொண்டாடும் கர்நாடக அரசு – நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்பு

மாவட்ட, தாலுகா, கார்ப்பரேஷன் மற்றும் வார்டு ஆகிய பகுதிகளில் இந்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதன் மூலம் கொரோனா நெருக்கடி குறித்த தேசிய வழிகாட்டுதல்களைப் பின்பற்ற மாநில மக்களுக்கு நினைவூட்டலாக அமைந்துள்ளது. மேலும் சுகாதாரப் பணியாளர்கள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உட்பட பலர் நடைபயணம் மேற்கொள்ள உள்ளனர். இந்நிகழ்வில் முகக் கவசம் அணிந்து கொண்டு 50 பேர் பங்கேற்க உள்ளனர்.

அத்துடன் முகக் கவச தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பெங்களூரைச் சேர்ந்த திரைப்பட நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் விதான சவுதாவில் உள்ள அம்பேத்கர் சிலையில் ஒன்று கூடி முகக் கவசம் அணிய வேண்டிய அவசியம் குறித்து விழிப்புணர்வை பரப்ப உள்ளனர்.