தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு.. லாக்டவுனை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்த கர்நாடக அரசு

தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு.. லாக்டவுனை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்த கர்நாடக அரசு

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகின்ற போதிலும், மாநிலத்தில் ஊரடங்கை மேலும் ஒரு வாரத்துக்கு அம்மாநில அரசு நீட்டித்துள்ளது.

கர்நாடகாவில் ஊரடங்கு காரணமாக கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா பாதிப்பு குறைந்த வண்ணம் உள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கு தளர்த்தப்படுமா என்று கேள்வி எழுந்தது. இந்த சூழ்நிலையில் முதல்வர் எடியூரப்பா நேற்று மாநிலத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் லாக்டவுன் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு மாநிலத்தில் லாக்டவுன் வரும் 21ம் தேதி வரை மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுவதாக முதல்வர் எடியூரப்பா அறிவித்தார்.

தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு.. லாக்டவுனை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்த கர்நாடக அரசு
பி.எஸ்.எடியூரப்பா

கர்நாடக மாநில சுகாதார துறை அமைச்சர் டாக்டர் கே சுதாகர் கூறியதாவது: சில மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு நேர்மறை விகிதம் 15 சதவீதத்துக்கும் குறைவாக உள்ள மாவட்டங்களில், தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கார்மெண்ட் ஆலைகள் 30 சதவீத வேலையாட்களுடன் இயங்கலாம். கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும் அனுமதி அளித்துள்ளது.

தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு.. லாக்டவுனை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்த கர்நாடக அரசு
கே.சுதாகர்

அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் திறந்து கொள்ளலாம். அதேசமயம் கொரோனா பாதிப்பு (நேர்மறை விகிதம் 15 சதவீதத்துக்கு மேல்) அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் பழைய கட்டுப்பாடுகள் தொடரும். அதேபோல் அனைத்து மாவட்டங்களிலும் தினமும் மாலை 6 மணி முதல் அதிகாலை 2 மணி வரை இரவு ஊரடங்கு தொடரும். வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை வார இறுதி ஊரடங்கு தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.