நவம்பர் 17 முதல் கல்லூரிகள் திறப்பு.. முதல்ல சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி.. கர்நாடக அரசு தகவல்

 

நவம்பர் 17 முதல் கல்லூரிகள் திறப்பு.. முதல்ல சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி.. கர்நாடக அரசு தகவல்

கர்நாடகாவில் நவம்பர் 17ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தடுப்பூசி முதலில் சுகாதார பணியாளர்களுக்கு வழங்க முன்னுரிமை கொடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

நம் நாட்டில் தொற்றுநோயான கொரோனா வைரஸ் பரவல் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் கட்டுக்குள் வந்து விடும் என தகவல் வெளியாகியுள்ளது. அதனை உறுதி செய்வது போல் தற்போது கொரோனா வைரஸ் தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. தற்போது பெரும்பாலான மாநிலங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறப்பது குறித்து சிந்திக்க தொடங்கி விட்டன.

நவம்பர் 17 முதல் கல்லூரிகள் திறப்பு.. முதல்ல சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி.. கர்நாடக அரசு தகவல்
சி.என். அஷ்வத் நாராயண்

தற்போது கர்நாடகாவில் பட்டப்படிப்பு, டிப்ளமோ மற்றும் பொறியியல் கல்லூரிகள் வரும் நவம்பர் 17ம் தேதி முதல் திறக்கப்படும் என அம்மாநில துணை முதல்வர் சி.என். அஷ்வத் நாராயண் தெரிவித்தார். அதேசமயம் கல்லூரிக்கு சென்று கற்க விரும்பும் மாணவர்கள் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்ற விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. யு.ஜி.சி. வழிகாட்டுதல்கள்படி வகுப்புகள் நடத்தப்படும் என துணை முதல்வர் அஷ்வத் நாராயண் தெரிவித்தார்.

நவம்பர் 17 முதல் கல்லூரிகள் திறப்பு.. முதல்ல சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி.. கர்நாடக அரசு தகவல்
கோவிட்-19 தடுப்பூசி

கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி முதலில் கொரோனா வைரஸ் எதிராக தங்களது உயிரை பணயம் வைத்து பணியாற்றிய சுகாதார பணியாளர்களுக்கு வழங்க முன்னுரிமை வழங்கப்படும் என அம்மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில சுகாதாரம், குடும்ப நலம் மற்றும் மருத்துவ கல்வித்துறை அமைச்சர் டாக்டர் சுதாகர் டிவிட்டரில், ஒவ்வொரு குடிமகனுக்கும் விரைவாக தடுப்பூசி வழங்குவது நமது அரசாங்கத்தின இலக்கு, அதேவேளையில் அரசு மற்றும் தனியார் துறையில் உள்ள அனைத்து சுகாதார பணியாளர்களுக்கும் தடுப்பூசி வழங்க முன்னுரிமை வழங்கப்படும். தடுப்பூசியை வெளியிடுவது தொடர்பான தயார் நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது என பதிவு செய்து இருந்தார். இம்மாதம் 31ம் தேதிக்குள் சுகாதார ஊழியர்களின் ஆரம்ப தகவல்களை சேகரிப்பு பணிகளை முடிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.