கொரோனாவில் இருந்து மீண்டார் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா

 

கொரோனாவில் இருந்து மீண்டார் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா

இந்தியாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா, உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த 4 ஆம் தேதி கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மருத்துவரின் அறிவுரைப்படி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக முன்னாள் முதல்வர் சித்தராமையா ட்வீட் செய்திருந்தார். அதே போல கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் 2 நாட்களுக்கு முன்னர் குணமடைந்து வீடு திரும்பினார்.

கொரோனாவில் இருந்து மீண்டார் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா

இதனிடையே சித்தராமையாவின் உடல் நலம் சீராக இல்லை எனவும் அவருக்கு காய்ச்சல் அதிகமாக இருப்பதாகவும் தகவல்கள் கசிந்தது. ஆனால் அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கொரோனாவில் இருந்து குணடமடைந்துள்ளார். அவரது பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் என வந்ததால், அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.