இப்போதைக்கு பள்ளிகளை திறக்கும் எண்ணம் இல்லை… கர்நாடக கல்வித்துறை அமைச்சர்

 

இப்போதைக்கு பள்ளிகளை திறக்கும் எண்ணம் இல்லை… கர்நாடக கல்வித்துறை அமைச்சர்

கர்நாடகாவில் தற்சமயம் பள்ளிகளை திறக்கும் திட்டம் எதுவும் இல்லை என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் எஸ். சுரேஷ் குமார் தெரிவித்தார்.

தொற்றுநோயான கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாத மத்தியில் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. அது முதல் இப்போது வரை பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்படாமல் உள்ளன. அதேசமயம் தெலங்கானா, அசாம் ஆகிய மாநிலங்களில் உயர் நிலை பள்ளிகள் மட்டும் செயல்பட்டு வருகின்றன. இதனால் வரும் நாட்களில் மற்ற மாநிலங்களிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படலாம் என எதிர்ப்பார்ப்பு எழுந்தது.

இப்போதைக்கு பள்ளிகளை திறக்கும் எண்ணம் இல்லை… கர்நாடக கல்வித்துறை அமைச்சர்
எஸ்.சுரேஷ் குமார்

குறிப்பாக கர்நாடகாவில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த மாதிரி திட்டம் எதுவும் இல்லை என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் எஸ். சுரேஷ் குமார் கூறியதாவது: மாநிலத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. தற்போது பள்ளிகளை திறக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை.

இப்போதைக்கு பள்ளிகளை திறக்கும் எண்ணம் இல்லை… கர்நாடக கல்வித்துறை அமைச்சர்
பள்ளி வகுப்பறை (கோப்பு படம்)

சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இது சம்பந்தமான மக்களிடம் கருத்துக்களை கேட்டு வருகிறோம். கல்வி நிபுணர்கள் மற்றும் நிறுவனங்களுடனும் நாங்கள் ஆலோசனை செய்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். அண்மையில் அம்மாநில அரசு, 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியர்களை சந்தித்து பாடம் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்க அனுமதி அளித்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதையடுத்து அடுத்த சில நாட்களில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல அம்மாநில அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.