பிற மாநிலங்களுக்கு பஸ்களை இயக்க தயார்… மகாராஷ்டிராவுக்கு மட்டும் முடியாது.. கர்நாடக துணை முதல்வர்

பிற மாநிலங்களுக்கு பஸ்களை இயக்க தயார்… மகாராஷ்டிராவுக்கு மட்டும் முடியாது.. கர்நாடக துணை முதல்வர்

மாநிலங்கள் இடையே மற்றும் மாநிலங்களுக்குள் மக்கள் மற்றும் சரக்குகள் போக்குவரத்துக்கு அனுமதி அளியுங்கள் என மத்திய அரசு அண்மையில் மாநில அரசுகளை கேட்டுக்கொண்டது. இதனையடுத்து கடந்த திங்கட்கிழமையன்று, கர்நாடக அரசு கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்த எல்லைகள், பஸ் ஸ்டாண்டுகள், ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் கடைப்பிடித்து வந்த சோதனை மற்றும் கண்காணிப்பு நடைமுறைகளை ரத்து செய்தது. மேலும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தால் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்பதையும் ரத்து செய்தது.

பிற மாநிலங்களுக்கு பஸ்களை இயக்க தயார்… மகாராஷ்டிராவுக்கு மட்டும் முடியாது.. கர்நாடக துணை முதல்வர்
லக்ஷ்மண் சவாடி

தற்போது மகாராஷ்டிராவை தவிர்த்து மற்ற மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்தை மீண்டும் தொடங்க தயார் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சரும், அம்மாநில முதல்வருமான லக்ஷ்மண் சவாடி கூறியதாவது: இப்போது லாக்டவுன் தளர்த்தப்பட்டபிறகு, ஆந்திராவிற்கு மட்டுமே போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களுக்கு போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்காக அந்த மாநிலங்களுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டன. ஆனால் அவர்கள் இன்னும் பதிலளிக்கவில்லை.

பிற மாநிலங்களுக்கு பஸ்களை இயக்க தயார்… மகாராஷ்டிராவுக்கு மட்டும் முடியாது.. கர்நாடக துணை முதல்வர்
கர்நாடக அரசு போக்குவரத்து பணியாளர்கள்

எங்கள் பகுதியிலிருந்து, மகாராஷ்டிராவை தவிர இந்த மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்தை மீண்டும் தொடங்க நாங்கள் அனைவரும் தயாராக இருக்கிறோம். மகாராஷ்டிரா இன்னும் கோவிட் அதிக ஆபத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த மாதத்துக்கு பிறகு அம்மாநிலத்துக்கான போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது குறித்து நாங்கள் முடிவு எடுப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார். லாக்டவுனுக்கு முன்னதாக ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கோவா, கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் புதுச்சேரி ஆகிய அண்டை மாநிலங்களுக்கு கர்நாடகாவிலிருந்து சுமார் 2,500 அரசு பேரூந்துகள் இயக்கப்பட்டன.