விவசாயிகளை தீவிரவாதி எனக்கூறிய கங்கனா மீது வழக்குப்பதிவு

 

விவசாயிகளை தீவிரவாதி எனக்கூறிய கங்கனா மீது வழக்குப்பதிவு

மத்திய அரசு மக்களவையிலும் மாநிலங்களவையிலும் நிறைவேற்றிய வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே போல தமிழகத்திலும் இந்த சட்டங்களுக்கு எதிராக பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் போராட்டங்கள் வலுத்துவருகின்றன.

இந்நிலையில் நடிகை கங்கனா ரானாவத் கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், “நாட்டில் யாரெல்லாம் குடியுரிமை மசோதாவை எதிர்த்தார்களோ அவர்கள்தான் இன்று விவசாய மசோதாவையும் எதிர்த்து, தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தீவிரவாதிகள். நான் சொல்வதை நீங்கள் நன்றாக அறிந்து இருப்பீர்கள், இருந்தாலும் தவறான செய்திகளை பரப்பி வருகிறீர்கள்” என பதிவிட்டிருந்தார்.

விவசாயிகளை தீவிரவாதி எனக்கூறிய கங்கனா மீது வழக்குப்பதிவு

இதையடுத்து விவசாயிகளை தனது ட்விட்டரில் தீவிரவாதி என்று விமர்சித்த நடிகை கங்கனா ரனாவத் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு தும்கூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விவசாயிகளின் மனதை புண்படுத்தும் வகையிலும், இளைஞர்களின் மனதில் வன்முறையை தூண்டும் வகையிலும் அவரது பதிவு இருந்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.