கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தொடரை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும்… காங்கிரஸ் கோரிக்கை

 

கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தொடரை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும்… காங்கிரஸ் கோரிக்கை

கர்நாடகவில் நேற்று தொடங்கிய சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடரை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதற்கு மத்தியில் நேற்று அம்மாநில சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் மொத்தம் 8 நாட்கள் நடைபெறுகிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில், கோவிட்-19 நிர்வாகம், ஊழல் உள்பட பல்வேறு விஷயங்களை எழுப்பி முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சியான காங்கிரஸ் தீவிரமாக உள்ளது.

கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தொடரை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும்… காங்கிரஸ் கோரிக்கை
டி.கே. சிவகுமார்

இந்த சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை காரணம் காட்டி கூட்டத்தொடரின் அமர்வை குறைக்க ஆளும் கட்சியான பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாக தகவல். அதேசமயம் எதிர்க்கட்சியான காங்கிரசோ கூட்டத்தொடரை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க விரும்புகிறது. கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவகுமார் இது குறித்து கூறியதாவது: சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஒரு வாரம் நீட்டிக்க விரும்புகிறோம். ஆனால் அவர்கள் (ஆளும் கட்சி) அதனை குறைக்க விரும்புகிறார்கள்.

கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தொடரை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும்… காங்கிரஸ் கோரிக்கை
கர்நாடக சட்டப்பேரவை

இந்த கூட்டத்தொடரில் சுமார் 30 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் பெரும்பாலானவை அவசர சட்டங்கள், அவை மாநில உணர்வுகளுக்கு எதிரானவை. இந்த முறை காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 1,600 கேள்விகளை முன்வைத்துள்ளனர். அவற்றுக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும். ஊழல்கள், கோவிட்-19 கையாளுவதில் தோல்வி, ஜி.எஸ்.டி. மற்றும் அழிவை ஏற்படுத்திய மழை உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.