கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

 

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது பல்வேறு நாடுகளிலும் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 18,03,695 ஆக உயர்ந்துள்ளது.

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

இதுவரை 11.86 லட்சம் பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,135 ஆக அதிகரித்துள்து என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது . இந்தியாவில் 24 மணிநேரத்தில் 52,972 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 771 பேர் பலியாகியுள்ளனர்.

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று உறுதி!
இந்நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவரின் அறிவுரைப்படி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக முன்னாள் முதல்வர் சித்தராமையா ட்வீட் செய்துள்ளார். ஏற்கனவே மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.