அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா; கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனிமை படுத்திக் கொண்டார்!

 

அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா; கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனிமை படுத்திக் கொண்டார்!

இதுவரை உலகம் முழுவதும்1 கோடியே 23 லட்சத்து 89 ஆயிரத்து 559 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 5 லட்சத்து 57 ஆயிரத்து 405 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 72 லட்சத்து 20 ஆயிரத்து 576 பேர் குணமாகியுள்ளனர். இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல, இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வரும் நிலையில் அன்லாக் 2.0 ஆரம்பித்து விட்டது.

அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா; கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனிமை படுத்திக் கொண்டார்!
**EDS: TO GO WITH STORY MDS 12** Bengaluru: Karnataka Chief Minister B S Yediyurappa during an interview with PTI on his (BJP) Government completing 100 days, in Bengaluru, Saturday, Nov. 2, 2019. (PTI Photo)(PTI11_2_2019_000216B)

கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. நேற்று ஒரே நாளில் அங்கு 2062 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,877 ஆக அதிகரித்துள்ளது. சாதாரண மக்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை எல்லாரையும் பாதித்த கொரோனா, முதல்வர் அலுவலகத்தையும் விட்டு வைக்கவில்லை. கர்நாடக முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கொரோனா உறுதியானதால், அம்மாநில முதல்வர் எடியூரப்பா தன்னை தனிமைப் படுத்திக் கொண்டார்.