கர்நாடகா முதல்வர் பதவி ராஜினாமா? முதல்வர் எடியூரப்பா விளக்கம்!!

 

கர்நாடகா முதல்வர் பதவி ராஜினாமா? முதல்வர் எடியூரப்பா விளக்கம்!!

கர்நாடக முதலமைச்சர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்யவில்லை என்று எடியூரப்பா விளக்கமளித்துள்ளார்.

கர்நாடகா முதல்வர் பதவி ராஜினாமா? முதல்வர் எடியூரப்பா விளக்கம்!!

கடந்த 2018ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைத்தது கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. ஆனால் இந்த ஆட்சி 2019ஆம் ஆண்டு கவிழ்ந்தது. தொடர்ந்து பாஜக தலைமையிலான ஆட்சி கர்நாடகாவில் அமைந்தது. இதில் எடியூரப்பா அம்மாநில முதல்வராக பதவியேற்றார். கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா அதிகம் தலையிடுவதாக புகார் எழுந்த நிலையில் சீனியர் நிர்வாகிகள் கடுப்பில் உள்ளதாக செய்திகள் வெளியாகின. இதைத்தொடர்ந்து நேற்று மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அத்துடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரையும் சந்தித்தார்.எடியூரப்பா பிரதமரை சந்தித்ததைத் தொடர்ந்து அவர் எடியூரப்பா உடல்நிலை காரணமாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின.

கர்நாடகா முதல்வர் பதவி ராஜினாமா? முதல்வர் எடியூரப்பா விளக்கம்!!

இந்நிலையில் கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படும் தகவலில் உண்மை இல்லை என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா விளக்கமளித்துள்ளார். பிரதமர் மோடி, பாஜக தலைவர் நட்டாவை சந்தித்த நிலையில் வெளியான தகவலுக்கு எடியூரப்பா மறுப்பு தெரிவித்துள்ளார்.கர்நாடகாவில் பாஜக தலைமை மாற்றப்படும் என்று வெளியான தகவல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது; அப்படி ஏதாவது இருந்தால் நீங்கள் எனக்குச் சொல்லுங்கள் என்று அவர் செய்தியாளர்களை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.