• December
    12
    Thursday

Main Area

Main



இன்னைக்கி ஒரு நாள் பொழுதை ஓட்டிட்டேன்னா, ஜெயிச்சுட்டேன் - குமாரசாமி!

CM Kumarasamy
CM Kumarasamy

கர்நாடகாவில் என்ன நடக்கிறது என்பதை ஒரு கட்டுரையாக எழுத உட்காரும்போது ஒரு நிலை, எழுதிக்கொண்டிருக்கும்போது வேறொரு முக்கிய அப்டேட், சரி அதையும் சேர்த்துவிடுவோம் என நினைத்து கட்டுரையை திருத்தி எழுதினால், இறுதியில் முற்றிலும் வேறொரு கோணத்தில் புதிய திருப்பம் வந்து சேருகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நேற்று குமாரசாமி ஆத்து ஆத்தென ஒரு உரையை ஆற்றினார். சரி, உரை முடிந்ததும் நம்பிக்கை வாக்கெடுப்பை கோருவார், அரசு கவிழும், இன்னைக்கே ஆட்சியில் அமர்ந்து, நாளைக்கு முதலமைச்சராக அத்திவரதரை போய் தரிசித்துவிட்டு வந்துவிடலாம் என எடியூரப்பா கற்பனை கோட்டை கட்டியிருக்க, முதலமைச்சர் குமாரசாமி ரொம்ப கூலாக விஷயத்தை ஹேண்டில் செய்கிறார்.

Kumarasamy

பொறுத்துப்பார்த்த பாஜக எம்.எல்.ஏக்கள் கவர்னரை சந்தித்து, உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த சபாநாயகருக்கு உத்தரவிடச் சொல்லி மனு அளித்தனர். பாஜக எம்.எல்.ஏக்கள் கவர்னர் மாளிக்கைக்குள் நுழைவதற்கு முன்பே, சபாநாயகருக்கு கடிதம் எழுதி தயாராக வைத்திருந்தார் கவர்னர். எம்.எல்.ஏக்கள் ஆளுநர் மாளிகையைவிட்டு வெளியேறுவதற்குள்ளாகவே, கடிதம் சபாநாயகரை வந்தடைந்தது. எலி வாண்டட்டாக வந்து வலையில் சிக்கியதால் சிரித்துக்கொண்ட முதல்வர் குமாரசாமி இதனையே சாக்காக வைத்து உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டுவிட்டார்.

BJP MLAs

என்னவென்று? 'சபாநாயகருக்கு உத்தரவிட ஆளுநருக்கு அதிகாரமில்லை, எனவே கவர்னரின் கடிதத்திற்கு தடை விதிக்க வேண்டும்'. ஆஹா, இவிங்க வேற ரூட்ல போறாய்ங்களே என நினைத்த எடியூரப்பா, இரவு முழுவதும் சட்டமன்றத்திலேயே எம்.எல்.ஏக்களுடன் படுத்து தர்ணாவில் ஈடுபட்டார். ஆனால், அங்கேயும் காங்கிரஸ் அரசு ட்விஸ்ட் அடித்தது. எப்படி? பாஜக எம்.எல்.ஏக்கள் பலர் பி.பி. பேஷண்ட் என்பதால், சரியான நேரத்துக்கு ராயல் டின்னர் ஒன்றை அவர்களுக்கு ஏற்பாடு செய்தது. கடைசிகட்ட நிலவரமாக குமாரசாமி மைன்ட்செட் இதுதான், இன்னைக்கி ஒரு நாள் பொழுதை ஓட்ட்டிடேன், ஜெயிச்சேன்"!

2018 TopTamilNews. All rights reserved.