மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்குகிறதா… என்ன சொல்கிறார் கர்நாடக முதல்வர்?

 

மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்குகிறதா… என்ன சொல்கிறார் கர்நாடக முதல்வர்?

மேகதாது அணைக் கட்ட அனுமதி வழங்குவதாக மத்திய அமைச்சர்கள் தன்னிடம் தெரிவித்தாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைக் கட்ட கர்நாடக அரசு திட்ட வரைவறிக்கையை மத்திய அரசிடம் வழங்கியுள்ளது. இது குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர், கர்நாடக அரசின் திட்ட வரைவறிக்கையை பரிசீலனை செய்ய முடியாது. தமிழக அரசின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்ட அனுமதி வழங்க முடியாது என்று தெரிவித்தார்.

மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்குகிறதா… என்ன சொல்கிறார் கர்நாடக முதல்வர்?

மாநிலங்களவையில் நிதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தது தமிழக மக்களை ஆறுதல் அடையச் செய்தது. மேகதாது அணை விவகாரம் முடிந்து விட்டது; தமிழக அரசின் அனுமதி இல்லாமல் அணையை கட்ட முடியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கூறியிருந்தார். இந்த நிலையில், டெல்லியில் மத்திய அமைச்சர்களை சந்தித்த போது அணைக் கட்ட அனுமதி வழங்குவோம் என அவர்கள் கூறியதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அணை கட்டுவது குறித்த விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அணைக்கு ஒப்புதல் தருவதாக நான் டெல்லி சென்ற போது அமைச்சர்கள் கூறினார்கள். மேகதாது அணை தொடர்பாக மீண்டும் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்திப்பேன். மேகதாது அணை கட்டுமானத்திற்காக உள்ள சட்டப் போராட்டம் பற்றி பேசுவேன் என்று பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்ற போது அணை கட்ட அனுமதி வழங்க மாட்டோம் என கூறிய மத்திய அரசு, பசவராஜ் பொம்மையிடம் அணை கட்ட அனுமதி வழங்குவோம் என மாற்றி மாற்றி தெரிவித்திருப்பது தற்போது பேசுபொருளாகியுள்ளது.