ஒளியாதீங்க… பிரச்சினை ஏற்படுத்தாதீங்க.. உங்க நலனுக்காக பண்ணிக்கோங்க.. கெஞ்சும் முதல்வர் எடியூரப்பா

 

ஒளியாதீங்க… பிரச்சினை ஏற்படுத்தாதீங்க.. உங்க நலனுக்காக பண்ணிக்கோங்க.. கெஞ்சும் முதல்வர் எடியூரப்பா

கர்நாடகாவில் 7 பேருக்கு இங்கிலாந்து கோவிட் வகை வைரஸ் தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் கோவிட்-19 பரிசோதனை செய்து கொள்ளும்படி அம்மாநில முதல்வர் பி.எஸ். எடியூரப்பா கோரிக்கை விடுத்துள்ளார்.

நம் நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் வெகுவாக குறைந்து உள்ளது. இந்த சூழ்நிலையில் இங்கிலாந்தில் வேகமாக பரவி வரும் புதிய கொரோனா வைரஸ், அந்நாட்டிலிருந்து இங்கு வந்த சிலருக்கு இருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்திலிருந்து நம் நாட்டுக்கு வந்தவர்களில் கர்நாடகாவை சேர்ந்த 7 பேர் இதுவரை மொத்தம் 20 பேருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்திலிருந்து நம் நாட்டுக்குள் புதிய வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நாட்டுக்கான விமான போக்குவரத்தை மத்திய அரசு தற்காலிகாக நிறுத்தி வைத்துள்ளது.

ஒளியாதீங்க… பிரச்சினை ஏற்படுத்தாதீங்க.. உங்க நலனுக்காக பண்ணிக்கோங்க.. கெஞ்சும் முதல்வர் எடியூரப்பா
விமான நிலையம்

கர்நாடகாவில் 7 பேருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானதையடுத்து, வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் கோவிட்-19 பரிசோதனை செய்து கொள்ளும்படி அம்மாநில முதல்வர் பி.எஸ். எடியூரப்பா கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா கூறியதாவது: வெளியிலிருந்து (இங்கிலாந்து மற்றும் பிற நாடுகள்) வந்தவர்கள் கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும்.

ஒளியாதீங்க… பிரச்சினை ஏற்படுத்தாதீங்க.. உங்க நலனுக்காக பண்ணிக்கோங்க.. கெஞ்சும் முதல்வர் எடியூரப்பா
புதிய வகை கொரோனா வைரஸ்

ஏற்கனவே வந்தவர்கள், மறைந்து இருப்பதற்கு பதிலாக அவர்கள் தங்களது சொந்த நலனுக்காக சோதனை செய்து கொள்ள வேண்டும். இது (இங்கிலாந்து கொரோனா வைரஸ்) மிக எளிதாக பரவுவதால் இதனை கட்டுப்படுத்த பரிசோதனை உதவும். மற்றவர்களுக்கு தேவையற்ற தொந்தரவு இருக்கக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். டிசம்பர் 9 முதல் 22ம் தேதி வரை வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்த அனைவரும் கட்டாயம் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்ததையடுத்து முதல்வர் எடியூரப்பா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.