கர்நாடக முதல்வர் எடியூரப்பா உருவ பொம்மை எரிப்பு!

 

கர்நாடக முதல்வர் எடியூரப்பா உருவ பொம்மை எரிப்பு!

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை எதிர்த்து காவிரி உரிமை மீட்புக்குழுவினர் எடியூரப்பாவின் உருவ பொம்மையை எரித்துப் போராட்டம் நடத்தினர்.

காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அங்கு அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது என்பதால் தமிழக அரசு அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எனினும், அணையை கட்டியே தீருவோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ள கர்நாடக அரசு, கட்டுமான பணியில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என தெரிவித்துள்ளது.

கர்நாடக முதல்வர் எடியூரப்பா உருவ பொம்மை எரிப்பு!

இந்த நிலையில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூரில் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் இன்று போராட்டம் நடத்தினர். மேகதாதுவில் அணை கட்டுவதற்கான தொடக்கநிலை பணிகள் நடைபெறுகிறதா என்பதை கண்டறிய தமிழக அரசு குழு அனுப்ப வேண்டும். அப்படி நடைபெற்றால் அதற்கு தடையாணை பெற வேண்டும். இந்த விவகாரத்தில் இறுதித் தீர்ப்பு வரும் வரை கர்நாடக அரசுக்கு அணை கட்ட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். பணி தொடங்க கூடாது என நீர்வளத் துறை அமைச்சர் கர்நாடக முதல்வரிடம் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்ற பல்வேறு முழக்கங்களை எழுப்பி அவர்கள் போராட்டத்தில் நடத்தினர்.

கர்நாடக முதல்வர் எடியூரப்பா உருவ பொம்மை எரிப்பு!

அப்போது, தமிழர்களுக்கு எதிரான போக்கை கடைபிடித்து வரும் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. அதேபோல கும்பகோணம், சோழபுரம், செங்கிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களிலும் எடியூரப்பாவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.