வேறு வாய்ப்பு இல்லை… கொரோனாவோடு வாழ கற்றுக்கொள்ளுங்கள்…. கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா

வேறு வாய்ப்பு இல்லை… கொரோனாவோடு வாழ கற்றுக்கொள்ளுங்கள்…. கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா

முன்னாள் துணை பிரதமர் பாபு ஜெகஜீவன் ராமின் நினைவு தினம் நேற்று கர்நாடகாவில் அனுசரிக்கப்பட்டது. கர்நாடகாவின் விதான் சவுதாவில் (சட்டப்பேரவை வளாகம்) பாபு ஜெகஜீவன் ராமின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா, பாபு ஜக்ஜீவன் ராமுக்கு நினைவு அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:

வேறு வாய்ப்பு இல்லை… கொரோனாவோடு வாழ கற்றுக்கொள்ளுங்கள்…. கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா

நம்மிடம் வேறு வாய்ப்பு இல்லை. அந்த வைரசுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி கூட இதே கருத்தைத்தான் சொன்னார். நாம் ஆம்புலன்ஸை அதிகரித்துள்ளோம், தொற்றுநோயுடன் போராட நாம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். நம்மை பாதுகாத்து கொள்ள இது மிகவும் முக்கியம். பரவலான நோயை எதிர்த்து போராட மாநில அரசு பல ஏற்பாடுகளை செய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வேறு வாய்ப்பு இல்லை… கொரோனாவோடு வாழ கற்றுக்கொள்ளுங்கள்…. கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா

கர்நாடகாவில் நேற்றைய நிலவரப்படி, கொரோனா வைரஸால் இதுவரை மொத்தம் 23,474 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9,847 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுககு 13,255 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று நோய்க்கு 372 பேர் பலியாகி உள்ளனர்.