கோயில் மட்டுமல்ல அனைத்து மத வழிபாட்டுதலங்களும்தான்…. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த எடியூரப்பா

கோயில் மட்டுமல்ல அனைத்து மத வழிபாட்டுதலங்களும்தான்…. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த எடியூரப்பா

கர்நாடகாவில் ஜூன் 1ம் தேதி முதல் கோயில்களை மீண்டும் திறக்க முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. அரசு நேற்று முன்தினம் முடிவு எடுத்தது. நாட்டில் முதலாவதாக கர்நாடக அரசுதான் கோயில்களை மீண்டும் திறப்பது தொடர்பாக முடிவு எடுத்தது. அதேசமயம் கர்நாடக அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கோயில் மட்டுமல்ல அனைத்து மத வழிபாட்டுதலங்களும்தான்…. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த எடியூரப்பா

பெங்களூரூ சாந்திநகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. என்.ஏ. ஹரிஸ் இது குறித்து கூறுகையில், கோயில்களோடு, மசூதிகள் மற்றும் தேவாலயங்களையும் ஒன்றாக திறக்க வேண்டும் அல்லாமல் கோயில்களை மட்டும் திறக்க முடியாது. அவர்களால் (எடியூரப்பா அரசு) இப்போது மதத்தின் பெயரில் அரசியல் செய்ய முடியாது. இது அரசாங்கத்தின் அணுகுமுறை என்றால் மக்கள் அவர்களுக்கு பாடம் கற்பிப்பார்கள் என தெரிவித்தார்.

கோயில் மட்டுமல்ல அனைத்து மத வழிபாட்டுதலங்களும்தான்…. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த எடியூரப்பா

இந்நிலையில் கோயில் திறப்பு சர்ச்சைக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேற்று முற்றுப்புள்ளி வைத்தார். இது தொடர்பாக முதல்வர் எடியூரப்பா கூறுகையில், ஜூன் 1ம் தேதி முதல் கோயில்கள் மட்டுமல்ல அனைத்து மத வழிபாட்டு தலங்களும் பொதுமக்களுக்கு திறக்கப்படும். இது தொடர்பாக மத்திய அரசின் அனுமதிக்காக அரசு காத்திருக்கிறது. மேலும் மாநிலத்தில் ஹோட்டல்கள் திறக்க அனுமதிக்கோரி பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதி உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.