நீண்ட நாட்களாக மருத்துவமனையில் இருக்கும் கோவிட் நோயாளிகள் வீட்டுக்கு போங்க.. எடியூரப்பா ஆவேசம்

நீண்ட நாட்களாக மருத்துவமனையில் இருக்கும் கோவிட் நோயாளிகள் வீட்டுக்கு போங்க.. எடியூரப்பா ஆவேசம்

நீண்ட நாட்களாக தேவையில்லாமல் மருத்துவமனையில் தங்கி இருக்கும் கோவிட் நோயாளிகள் வீட்டுக்கு செல்ல வேண்டும் என கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தெரிவித்தார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கோவிட் வார் அறையை கர்நாடக அரசு தொடங்கியுள்ளது. இது, கோவிட் நோயாளிகள், மருத்துவமனைகளின் படுக்கைகளின் நிலை, ஆக்சிஜன் கிடைப்பு மற்றும் தொற்றுநோய்க்கான பிற அத்தியாவசிய மருந்துகள் தொடர்பான தரவுகளை உருவாக்கியுள்ளது. இந்த கோவிட் வார் அறை குறித்து பா.ஜ.க. எம்.பி. தேஜஸ்வி சூர்யா பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

நீண்ட நாட்களாக மருத்துவமனையில் இருக்கும் கோவிட் நோயாளிகள் வீட்டுக்கு போங்க.. எடியூரப்பா ஆவேசம்
தேஜஸ்வி சூர்யா

தனியார் மருத்துவமனைகளில் படுக்கை முன்பதிவு மோசடி நடக்கிறது. கோவிட் வார் அறையின் சில ஊழியர்கள் மருத்துவமனை மற்றும் குடியுரிமை அதிகாரிகளுடன் இணைந்து அரசாங்கத்தின் படுக்கை ஒதுக்கீட்டை தடுக்கிறார்கள் என தேஜஸ்வி குற்றம் சாட்டினார். இதனையடுத்து கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா கோவிட் வார் அறைக்கு சென்று ஆய்வு செய்தார். அதன் பிறகு பி.எஸ்.எடியூரப்பா செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:

நீண்ட நாட்களாக மருத்துவமனையில் இருக்கும் கோவிட் நோயாளிகள் வீட்டுக்கு போங்க.. எடியூரப்பா ஆவேசம்
மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள் (கோப்புப்படம்)

332 நோயாளிகள் 30 நாட்களாக மருத்துவமனையில் இருக்க வேண்டிய அவசியம் என்ன? அவர்கள் படுக்கைகளை காலி செய்ய வேண்டும். 20 நாட்ககளுக்கு மருத்துவமனையில் 503 நோயாளிகள் உள்ளனர். இது போன்று தேவையில்லாமல் மருத்துவமனையில் தங்கியுள்ளவர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டும். இது நோய் தீவிரமாக உள்ளவர்களுக்கு சிகிச்சை பெற வழி வகுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.