கர்நாடக முதல்வராக 3வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எடியூரப்பா.. காலை 11 மணிக்கு பதவியில் நீடிப்பாரா என்று தெரியும்

 

கர்நாடக முதல்வராக 3வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எடியூரப்பா.. காலை 11 மணிக்கு பதவியில் நீடிப்பாரா என்று தெரியும்

கர்நாடக முதல்வராக பி.எஸ். எடியூரப்பா 3வது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறார். அதேசமயம் இன்று காலை 11 மணி அளவில் அவர் முதல்வராக தொடருவாரா என்று தெரிந்து விடும் என்று பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்தன.

கர்நாடகாவில் முன்னாள் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-மதசார்ப்பற்ற ஜனதா தளத்தின் கூட்டணி அரசு கவிழ்ந்ததையடுத்து, 2019 ஜூலை 26ம் தேதியன்று முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகள் வரை பி.எஸ்.எடியூரப்பா தலைமையிலான அரசு எந்தவித சிக்கலும் இல்லாமல் சென்றது. இந்த சூழ்நிலையில், எடியூரப்பாவின் செயல்படும் பாணியில் அதிருப்தி மற்றும் ஆட்சியில் அவரது மகன் விஜயேந்திராவின் தலையீடு இருப்பதாக பா.ஜக. எம்.எல்.ஏ.க்களில் ஒரு பகுதியினர் எடியூரப்பாவுக்கு போர்க்கொடி தூக்கினர்.

கர்நாடக முதல்வராக 3வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எடியூரப்பா.. காலை 11 மணிக்கு பதவியில் நீடிப்பாரா என்று தெரியும்
பா.ஜ.க.

மேலும், முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பாவை நீக்கக்கோரி கட்சியின் தலைமைக்கு கடிதம் எழுதினர் மேலும் ஒரு பகுதியினர் டெல்லி சென்று பா.ஜ.க. தலைமையையும் சந்தித்து பேசினர். இருப்பினும் இந்த நெருக்கடிக்கு மத்தியில் பி.எஸ். எடியூரப்பா முதல்வராக தொடர்ந்தார். இந்த சூழ்நிலையில், எடியூரப்பா அண்மையில் டெல்லி சென்ற போது, முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக மேலிடத்தில் தெரிவித்ததாகவும், பிரதமர் மோடியும் அதனை ஏற்றுக்கொண்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் எடியூரப்பா அந்த தகவலை மறுத்தார். அதேசமயம், கட்சி தலைமைக்கு முடிவுக்கு கட்டுப்படுவேன் என்று தெரிவித்தார்.

கர்நாடக முதல்வராக 3வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எடியூரப்பா.. காலை 11 மணிக்கு பதவியில் நீடிப்பாரா என்று தெரியும்
பி.எஸ்.எடியூரப்பா-பிரதமர் மோடி

நேற்று எடியூரப்பா செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல்வர் பதவியில் நீடிப்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்த தகவல் இன்றிரவு (நேற்றிரவு) அல்லது நாளை (இன்று) காலைக்குள் தெரியவரும் என்று தெரிவித்தார். நேற்றிரவு வரை எந்ததகவலும் கட்சி மேலிடத்திலிருந்து எடியூரப்பா வந்ததாக தெரியவில்லை. இந்நிலையில், பெங்களூருவில் விதான சௌதாவில் இன்று காலை 11 மணிக்கு பா.ஜ.க. அரசின் 2 ஆண்டுகால சாதனை விழா நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா பேச உள்ளார். அப்போது அவர் முதல்வராக தொடருவாரா அல்லது இல்லையா என்பது குறித்து தெரிவிப்பார் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.