ஏப்ரலில் கர்நாடகாவுக்கு புதிய முதல்வரா? பத்த வச்ச பா.ஜ.க. எம்.எல்.ஏ….. வெளியே வரும் பா.ஜ.க.வின் உட்கட்சி மோதல்

ஏப்ரலில் கர்நாடகாவுக்கு புதிய முதல்வரா? பத்த வச்ச பா.ஜ.க. எம்.எல்.ஏ….. வெளியே வரும் பா.ஜ.க.வின் உட்கட்சி மோதல்

ஏப்ரல் 13ம் தேதியன்று கர்நாடகா புதிய முதல்வரை பெறும் என்று அம்மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ. கூறியிருப்பது யூகங்களை கிளப்பியுள்ளது.

கர்நாடக மாநிலம் பிஜாப்பூர் நகரம் சட்டப்பேரவை தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பா.ஜ.க.வின் பசனகவுடா பாட்டீல் யட்னல். இவருக்கும், அம்மாநில முதல்வர் பி.எஸ். எடியூரப்பாவுக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை. பசனகவுடா யாட்டீல் யட்னல் அடிக்கடி வெளிப்படையாக பி.எஸ். எடியூரப்பாவின் பணியாற்றும் விதத்தை விமர்சனம் செய்து வருகிறார்.

ஏப்ரலில் கர்நாடகாவுக்கு புதிய முதல்வரா? பத்த வச்ச பா.ஜ.க. எம்.எல்.ஏ….. வெளியே வரும் பா.ஜ.க.வின் உட்கட்சி மோதல்
பசனகவுடா

கடந்த அக்டோபரில், பி.எஸ். எடியூரப்பா நீண்ட காலம் முதல்வராக இருக்க மாட்டார். மேலும் அவருக்கு பதிலாக வட கர்நாடகாவை சேர்ந்த ஒருவரை பா.ஜ.க. மேலிடம் தேர்வு செய்துள்ளதாக பசனகவுடா தெரிவித்து இருந்தார். இது கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து உட்கட்சி விவகாரத்தை பொதுவெளியில் பேசக்கூடாது என்று கட்சி மேலிடம் மூத்த தலைவர்களை எச்சரிக்கை செய்து இருந்தது. இந்த சூழ்நிலையில் பசனகவுடா மீண்டும் முதல்வர் மாற்றப்படுவார் என்று கூறியுள்ளார்.

ஏப்ரலில் கர்நாடகாவுக்கு புதிய முதல்வரா? பத்த வச்ச பா.ஜ.க. எம்.எல்.ஏ….. வெளியே வரும் பா.ஜ.க.வின் உட்கட்சி மோதல்
பா.ஜ.க.

கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.எ. பசனகவுடா பாட்டீல் யட்னல் கூறுகையில், இனிமேல் நான் அமைச்சர் பதவியை தேடும் திறந்த கைகளுடன் செல்லமாட்டேன். அமைச்சர் பதவியை வழங்கக்கூடிய (முதலமைச்சரின்) இடத்தில் ஒருவர் வருவாய் என்று நான் கூறியுள்ளேன். வடக்கு கர்நாடகாவிலிருந்து ஒருவர் வருவார் என்று நான் கூறியுள்ளேன். அது நடக்கும். காத்திருந்து பாருங்கள். இது மிக விரைவில் வரும். நீங்கள் (ஊடக நபர்) உகாடி சொன்னது போல, புதிய ஆண்டுக்கு, புதிய (முதல்வர்) என்று தெரிவித்தார். எடியூரப்பாவின் வயது (77 வயது) காரணமாக கர்நாடகாவில் தலைமை மாற்றத்தை பா.ஜ.க. மேலிடம் பரிசீலனை செய்து வருவதாக ஊகங்கள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 13ம் தேதியன்று கர்நாடகாவில் உகாடி (புத்தாண்டு) திருநாள் கொண்டாடுவர்.