கர்நாடகாவில் பப்களை அடைக்க சொல்லும் மாநில பா.ஜ.க. தலைவர்.. தர்மசங்கடத்தில் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா

கர்நாடகாவில் பப்களை அடைக்க சொல்லும் மாநில பா.ஜ.க. தலைவர்.. தர்மசங்கடத்தில் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா

கர்நாடகாவில் உள்ள அனைத்து பப்களையும் அடைக்க வேண்டும் அவை இளைஞர்களை அழிக்கிறது என அம்மாநில பா.ஜ.க. தலைவர் வலியுறுத்தியுள்ளார். இது முதல்வர் பி.எஸ். எடியூரப்பாவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாத இறுதியில் அன்லாக் 4 வழிகாட்டுதல்களை வெளியிட்டதை தொடர்ந்து, கர்நாடகாவில் இந்த மாதம் முதல் அனைத்து பார்கள், ரெஸ்ட்ராண்ட், கிளப்புகள் மற்றும் பப்களை மீண்டும் திறந்து கொள்ள அம்மாநில அரசு அனுமதி அளித்தது.

கர்நாடகாவில் பப்களை அடைக்க சொல்லும் மாநில பா.ஜ.க. தலைவர்.. தர்மசங்கடத்தில் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா
கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா

இந்த சூழ்நிலையில், மாநிலத்தில் உள்ள பப்களை மூட வேண்டும் என்று முதல்வர் எடியூரப்பா அரசை அம்மாநில பா.ஜ.க. தலைவர் நலின் குமார் கட்டீல் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக நலின் குமார் கட்டீல் கூறுகையில், எங்கள் காலத்தில் கிளப்புகளின் செயல்பாட்டை நிறுத்தினோம். மாவட்டத்தில் உள்ள பப்கள் மூடப்பட வேண்டும். இது இளைஞர்களை அழித்து வருகிறது.

கர்நாடகாவில் பப்களை அடைக்க சொல்லும் மாநில பா.ஜ.க. தலைவர்.. தர்மசங்கடத்தில் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா
நலின் குமார் கட்டீல்

அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றால், நீதிமன்றம் வாயிலாக சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு இளைஞர் பிரிவுக்கு தகவல் தெரிவிப்பேன் என தெரிவித்தார். பப்களை மூடினால் அவற்றின் வாயிலாக அரசுக்கு வர வேண்டிய வருவாய் கிடைக்காது ஆனால் தனது கட்சியே பப்களை மூட வேண்டும் என வலியுறுத்துவதால் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அரசுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது.