புதிய சாதனை படைத்த கர்நாடக வங்கி…. இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.196 கோடி லாபம்…

புதிய சாதனை படைத்த கர்நாடக வங்கி…. இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.196 கோடி லாபம்…

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் பரவலால் வங்கிகள் அதிகம் இடர்பாட்டை சந்திக்கும் என நிபுணர்கள் கணித்த இருந்த நிலையில், அது முற்றிலும் தவறு என்பதை கர்நாடக வங்கியின் கடந்த ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகள் அழுத்த திருத்தமாக சொல்லியுள்ளது. கர்நாடக வங்கி சென்ற காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச லாபத்தை ஈட்டியுள்ளது.

புதிய சாதனை படைத்த கர்நாடக வங்கி…. இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.196 கோடி லாபம்…
கர்நாடக வங்கி

நிகர லாபம்

2020 ஜூன் காலாண்டில் கர்நாடக வங்கி நிகர லாபமாக இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.196 கோடி ஈட்டியுள்ளது. இது 2019 ஜூன் காலண்டைக் காட்டிலும் 12 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் கர்நாடக வங்கி நிகர லாபமாக ரூ.175 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது. இதுதான் இதற்கு முன்புவரை அந்த வங்கியன் அதிகபட்சமாக நிகர லாபமாக இருந்தது. 2020 ஜூன் காலாண்டில் கர்நாடக வங்கியின் செயல்பாட்டு லாபம் 93 சதவீதம் அதிகரித்து ரூ.350 கோடியிலிருந்து ரூ.677 கோடியாக உயர்ந்துள்ளது.

புதிய சாதனை படைத்த கர்நாடக வங்கி…. இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.196 கோடி லாபம்…
கர்நாடக வங்கி

வட்டி வருவாய்

2020 ஜூன் காலாண்டில் கர்நாடக வங்கியின் நிகர வட்டி வருவாய் 8 சதவீதம் அதிகரித்து ரூ.535 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஜூன் காலாண்டு இறுதி நிலவரப்படி கர்நாடக வங்கியின் மொத்த வாராக் கடன் 4.64 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் 3.01 சதவீதமாகவும் குறைந்துள்ளது. கடந்த ஜூன் காலாண்டில் கர்நாடக வங்கி திரட்டிய டெபாசிட் ரூ.71,854 கோடியாகவும், வழங்கிய கடன் ரூ.54,210 கோடியாகவும் உயர்ந்துள்ளது.