கர்நாடகா: காவிரியில் 44,428 கன அடி நீர் திறப்பு!

 

கர்நாடகா: காவிரியில் 44,428 கன அடி நீர் திறப்பு!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதைத் தொடர்ந்து கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் 44,428 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் பருவமழை பொழிந்து வருகிறது. இதனால் காவிரியில் கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பியுள்ளன. இதனால் மழை பொழிவு காரணமாக வரும் தண்ணீர் முழுவதும் உபரி நீராக திறக்கப்பட்டு வருகிறது.

கர்நாடகா: காவிரியில் 44,428 கன அடி நீர் திறப்பு!
தற்போது அங்கு நல்ல மழை பொழிந்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 42,928 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்படுகிறது.

கர்நாடகா: காவிரியில் 44,428 கன அடி நீர் திறப்பு!
கபினி அணைக்கு 5,480 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால், தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீரின் அளவு 44,4528 கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து அங்கு மழை பெய்து வருவதால் மேலும் தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கர்நாடகா: காவிரியில் 44,428 கன அடி நீர் திறப்பு!
தற்போது மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து விநாடிக்கு 7,079 கன அடியாக உள்ளது. இன்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.94 அடியாக உள்ளது. 62.2 டி.எம்.சி தண்ணீர் கையிருப்பில் உள்ளது. அணையில் இருந்து 16,500 கன அடி தண்ணீர் காவிரி டெல்டா பாசனத்துக்காக திறந்துவிடப்பட்டுள்ளது.