“சும்மா சுற்றுலா போனேன்… கட்சிய விட்டு தூக்கிட்டாங்க” – சசிகலா சந்திப்பு விவகாரத்தில் மௌனம் கலைத்த யுவராஜ்!

“சும்மா சுற்றுலா போனேன்… கட்சிய விட்டு தூக்கிட்டாங்க” – சசிகலா சந்திப்பு விவகாரத்தில் மௌனம் கலைத்த யுவராஜ்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்துவதில் கவனம் செலுத்துகிறாரோ? இல்லையோ? சசிகலாவுக்காக யார் வாய்ஸ் கொடுக்கிறார்கள் என்பதை கண்கொத்தி பாம்பாக கண்காணிக்கிறார். நான்கு ஆண்டுகாளாக கட்டிக்காத்த அந்த ஆளுமையை ஒரே நாளில் சசிகலா ஹைஜாக் செய்துவிடுவாரோ என்ற பயத்தின் வெளிப்பாடாகவே அதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. சசிகலா விடுதலை தொடர்பான செய்தி வெளியான உடனே போஸ்டர் ஒட்டிய அடிப்படை நிர்வாகியை இரு கையெழுத்துகளில் அதிமுகவின் இரட்டைத் தலைமை தூக்கியெறிந்தது. சசிகலா பெயரில் ச.. என்று ஆரம்பித்தாலே டிரான்ஸ்பார்மராக வெடிக்கிறார்கள்.

“சும்மா சுற்றுலா போனேன்… கட்சிய விட்டு தூக்கிட்டாங்க” – சசிகலா சந்திப்பு விவகாரத்தில் மௌனம் கலைத்த யுவராஜ்!

இச்சூழலில், கர்நாடக மாநில அதிமுக செயலாளராக இருந்த யுவராஜ் சசிகலாவைச் சந்தித்தாக ஒரு செய்தி வலம் வந்தது. இச்செய்தி வெளிவந்த சூட்டோடு சூட்டாக யுவராஜ் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார் எனவும், அவரிடம் கழகத்தினர் அன்னந்தண்ணி புழங்கக் கூடாது என்றும் கூட்டாக ஈபிஎஸ்-ஓபிஎஸ் அறிக்கை விட்டார்கள். இதுதொடர்பாக என்ன நடந்தது என்பதை விசாரிக்க தனியார் செய்தி நிறுவனம் யுவராஜை தொடர்பு கொண்டு கேட்டிருக்கிறது.

“சும்மா சுற்றுலா போனேன்… கட்சிய விட்டு தூக்கிட்டாங்க” – சசிகலா சந்திப்பு விவகாரத்தில் மௌனம் கலைத்த யுவராஜ்!

அதற்குப் பதிலளித்த அவர், “நான் எந்தத் தவறும் செய்யவில்லை. நந்தி ஹில்ஸ் எனும் சுற்றுலா தலத்திற்குத்தான் நான் என்னுடைய குடும்பத்துடன் காரில் சென்றுகொண்டிருந்தேன். அங்கு செல்லும் வழியில் தான் சசிகலா தங்கியிருக்கும் ரிசார்ட் அமைந்திருக்கிறது. என்னுடைய கார் அவ்வழியாகச் சென்றதை யாரோ வீடியோ எடுத்துவிட்டு, நான் ரிசார்ட் சென்று சசிகலாவைச் சந்தித்ததாக புரளியைக் கிளப்பியுள்ளனர். அதன்பின் தான் என்னைக் கட்சியிலிருந்து நீக்கிவிட்டார்கள்” என்று கூறியிருக்கிறார்.

“சும்மா சுற்றுலா போனேன்… கட்சிய விட்டு தூக்கிட்டாங்க” – சசிகலா சந்திப்பு விவகாரத்தில் மௌனம் கலைத்த யுவராஜ்!

தன்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல் நீக்கிவிட்டார்கள் என்று ஆதங்கப்படும் யுவராஜ், கட்சியில் ஜனநாயகத் தன்மை இல்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். அதேபோல தனது ஆதரவு சசிகலாவுக்குத் தான் என்பதையும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.