அதிமுக அல்லது பாஜகவில் இணைவது உறுதி! அடுத்த முதல்வர் பழனிசாமிதான்- கராத்தே தியாகராஜன்

 

அதிமுக அல்லது பாஜகவில் இணைவது உறுதி! அடுத்த முதல்வர் பழனிசாமிதான்- கராத்தே தியாகராஜன்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கராத்தே தியாகராஜன், “ரஜினி, அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் அரசியலுக்கு வரவில்லை.இதன் காரணமாக நான் ஒரு முடிவு எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளேன். கடந்த வாரம் பா.சிதம்பரம் என்னை அழைத்து மீண்டும் காங்கிரசில் இணைய சொன்னார், நான் மறுத்து விட்டேன்.. திமுகவின் கூட்டணியில் காங்கிரஸ் இருக்கலாம், ஆனால் அடிமையாக இருக்க கூடாது. சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி தலைவர் ஆகி இதுவரை காமராஜர் நினைவிடம் வரவில்லை. இதை நான் அவர்களிடம் கூற முயற்சி செய்த போது ஸ்டாலின் கோபித்து கொள்வார் என்ற எண்ணத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தியிடம் கூற மறுத்துவிட்டனர்.

அதிமுக அல்லது பாஜகவில் இணைவது உறுதி! அடுத்த முதல்வர் பழனிசாமிதான்- கராத்தே தியாகராஜன்

ராகுல் காந்தியிடம் வேண்டுகோள் வைக்கிறேன் அடுத்த முறை சென்னை வந்தால் காமராஜர் நினைவிடத்தில் மரியாதை செய்ய வேண்டும். திமுகவின் முதல்வர் வேட்பாளர் துர்கா ஸ்டாலின் தான், ஸ்டாலின் செயல் தலைவர் தான். கலைஞர் ஆர்.எஸ்.எஸ்- ஐ ஒரு சமுதாய இயக்கம் என கூறியவர் கருணாநிதி. தமிழ்நாட்டில் 15 தொகுதியை மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு திமுக தர போகிறது.ரஜினியிடம் நெருங்கிய நட்பில் இருந்தவன் நான். தற்பொழுது அவரது உடல் நிலை சரியில்லை. கோடிகணக்கான ரசிகர்கள் அவரை நம்பி உள்ளனர். விளங்காத இருவரை தனது கட்சியில் பொறுப்பாளர்களாக ரஜினிகாந்த் போட்டார்.. ஒன்று தமிழருவி மணியன், மற்றொருவர் அர்ஜுன மூர்த்தி. இதை ரஜினிகாந்த் இடமே சொல்லி உள்ளேன்..

படங்களில் கெஸ்ட் ரோலில் நடிப்பது போல் அரசியலில் ரஜினியிடம் கெஸ்ட் ரோல் செய்ய கேட்டு கொள்கிறேன். எப்படியும் இந்த தேர்தலில் ரஜினிகாந்த் குரல் எழுப்புவார். அனைத்து கட்சிகளும் ரஜினியிடம் ஆதரவு கேட்கிறது. கோடிக்கணக்கான ரசிகர்கள் ரஜினிக்காக காத்திருக்கின்றனர். 10 நாட்களுக்குள் ஒரு முடிவை எடுக்க உள்ளேன். எனக்கு இருக்கக்கூடிய வாய்ப்பு 2 மட்டுமே. ஒன்று திமுக மற்றொன்று அதிமுக. எடப்பாடி பழனிச்சாமி நல்லாட்சி கொடுத்து வருகிறார். பழனிசாமி கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டு உள்ளார். கூட்டணி தலைவர்களுடன் ஸ்டாலின் பேசுவதே இல்லை. மேயர் ஆவதற்கே தகுதி இல்லாதவர் ஸ்டாலின். அதிமுக, பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்து விட்டேன். விரைவில் 2 கட்சியில் ஒன்றில் சேருவேன்” எனக் கூறினார்.