பாஜகவில் இணைகிறார் கராத்தே தியாகராஜன்?

 

பாஜகவில் இணைகிறார் கராத்தே தியாகராஜன்?

ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என்ற நம்பிக்கையில் இருந்து ஏமாந்தவர்களில் கராத்தே தியாகராஜனும் ஒருவர். அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் இருந்த இவர் கராத்தே பயிற்சியாளராவார். அதனாலேயே அவருக்கு இந்த பெயர் புனைப்பெயராக மாறியது. இவர் அகில இந்திய கராத்தே கூட்டமைப்பின் தலைவராக இருந்து பின்னர் நிதி கையாடல் தொடர்பான சர்ச்சைகளை அடுத்து பதவி விலகினார். தன்பிறகு இந்திய கராத்தே சங்கம் என்ற அமைப்பைத் தொடங்கி அதன் தலைவராகவும் உள்ளார்.

பாஜகவில் இணைகிறார் கராத்தே தியாகராஜன்?

பெருநகர சென்னை மாநகராட்சியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளாட்சி உறுப்பினராகத் தேர்வானார். நகரத்தந்தை பதவியிலிருந்து மு. க. ஸ்டாலின் விலகிய பின்னர் 2002 முதல் 2005 வரை இவர், பொறுப்பு நகரத்தந்தையாகப் பதவி வகித்தார். 2001 இல் கருணாநிதி கைதிற்குக் காரணமான மேம்பாலங்கள் கட்டுமான புகாருக்குப் பின்னணியாக இருந்தவர் கராத்தே தியாகராஜன், அதன்பின் 2005 இல் இவர் மீது ஊழல் முறைகேடு குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். ஆறு மாதக்கால தலைமறைவிற்குப் பின் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருக்கையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து 27 ஜூன் 2019 இல் நீக்கப்பட்டார்.

இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் சென்னை மாநகர் முன்னாள் மேயர் கராத்தே தியாகராஜன் நாளை பாஜகவில் இணையவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.