பாஜகவில் இணைந்தார் கராத்தே தியாகராஜன்

 

பாஜகவில் இணைந்தார் கராத்தே தியாகராஜன்

ரஜினி கட்சி தொடங்குவார் என நம்பிக்கையுடன் காத்திருந்து ஏமாற்றமடைந்த கராத்தே தியாகராஜன் பாஜகவில் இணைந்தார்.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழகத்தின் பிரதான கட்சிகள் தேர்தல் பரப்புரையை பரபரப்பாக மேற்கொண்டு வருகிறது. அத்துடன் இந்நேரத்தில் கட்சி தாவல்களும் அதிகரித்துள்ளது. குறிப்பாக ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பலரும் திமுக மற்றும் பாஜகவில் இணைந்து வருகின்றனர்.

பாஜகவில் இணைந்தார் கராத்தே தியாகராஜன்

இந்நிலையில் காங்கிரஸில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவரும், ரஜினியின் தீவிர ஆதரவாளருமான காராத்தே தியாகராஜன் அதிமுக அல்லது பாஜகவில் இணையவுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று, சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் அவர் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் நடைபெற்ற இணைப்பு விழா பொதுக்கூட்டத்தில் தனது ஆதரவாளர்களுடன் கராத்தே தியாகராஜன் பாஜகவில் இணைந்தார்.