கொரோனாவே ரஜினி அரசியல் வருகைக்கு தடையாக இருக்க காரணம்! சமாளிக்கும் கராத்தே தியாகராஜன்

 

கொரோனாவே ரஜினி அரசியல் வருகைக்கு தடையாக இருக்க காரணம்! சமாளிக்கும் கராத்தே தியாகராஜன்

ரஜினியின் அரசியல் வருகையை மக்கள் எதிர்பார்க்கிறார்களோ இல்லை, அவரது மன்ற நிர்வாகிகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நான் அரசியலுக்கு வருவேன் என்று ரஜினி கூறி 2 ஆண்டுகள் ஆகின்றன. இதற்காக தனது ரசிகர் மன்றங்களை ரஜினி மக்கள் இயக்கமாக மாற்றினார். இதன் பின்னர், இயக்கத்தில் உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் அவரது நிர்வாகிகள் ஈடுபட்டனர். இதன் பணியும் முடிந்துவிட்டது. தற்போது, ரஜினி கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர வேண்டியதுதான் பாக்கி. ஏப்ரலில் ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என்று அவரது சகோதரர் சத்யநாராயண கெய்க்வாட் கூறியிருந்தார். கொரோனாவால் தற்போது அந்த அறிவிப்பு தள்ளிபோய் விட்டது.

கொரோனாவே ரஜினி அரசியல் வருகைக்கு தடையாக இருக்க காரணம்! சமாளிக்கும் கராத்தே தியாகராஜன்

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினியின் நண்பரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் நிர்வாகியுமான கராத்தே தியாகராஜன், “சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. கொரோனா காலம் என்பதால் ரஜினி பொதுமக்களை தொந்தரவு செய்யாமல் இருக்கிறார். 2021 சட்டமன்ற தேர்தலில் வருவேன் என்றார். அதற்கு இதுவரை எந்த மறுப்பும் ரஜினி தெரிவிக்கவில்லை. அதே நிலைப்பாட்டில் தான் ரஜினி இருக்கிறார். தினேஷ் குண்டுராவ்வின் பாதுகாப்பு அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அறிந்தும் அவரை வைத்து காங்கிரஸ் கூட்டத்தை நடத்தி இருக்கிறார் கே.எஸ்.அழகிரி. எனவே கே.எஸ்.அழகிரியை கைது செய்ய வேண்டும்” எனக் கூறினார்.