குஷ்புவுடன் சேர்ந்து இன்னும் சில நிர்வாகிகளும் காங்கிரஸிலிருந்து வெளியேறுவர்: கரத்தே தியாகராஜன்

 

குஷ்புவுடன் சேர்ந்து இன்னும் சில நிர்வாகிகளும் காங்கிரஸிலிருந்து வெளியேறுவர்: கரத்தே தியாகராஜன்

காங்கிரஸின் தேசிய தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு, பாஜகவில் இணையவிருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்த குஷ்பு, எனக்கு காங்கிரஸில் எந்த பிரச்னையும் இல்லை என்றும் வெளியாகும் தகவல் அனைத்தும் வதந்தி என்றும் தெரிவித்தார். ஆனால் திடீரென டெல்லிக்கு சென்ற குஷ்பு, பாஜக தலைவர்களை சந்தித்தது பாஜகவில் இணைந்தார்.

இந்நிலையில் சென்னை அடையாறில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், “குஷ்பு கட்சியில் இருந்து வெளியே செல்வதை கட்சி தலைமை தடுக்கவில்லை. நடிகையாக பார்க்க கூடாது. ஒரு தொண்டன் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியே சென்றால் கூட பாதிப்பு தான்.2015 மழை வெள்ளத்தில் மக்களுக்கு நிவாரண உதவிகள் என பல நேரங்களில் குஷ்பூ கட்சிக்காக பணியாற்றினார். இதை மறக்க கூடாது. கட்சி நிர்வாகிகளை தலைவர் கே.எஸ்.அழகிரி ஒருங்கிணைப்பு செய்வதில்லை. முன்னாள் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சியில் இருந்து வெளியேற இருக்கின்றனர்.

குஷ்புவுடன் சேர்ந்து இன்னும் சில நிர்வாகிகளும் காங்கிரஸிலிருந்து வெளியேறுவர்: கரத்தே தியாகராஜன்

ஏற்கனவே முன்னாள் மாவட்ட தலைவர்கள் வெளியேற்றம். என் மீது கூட நடவடிக்கை என்ற பெயரில் வெளியேற்றினர். தற்போதைய சூழலில் கட்சியில் இருக்கும் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. இதே நிலை நீடித்தால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 15 சட்டமன்ற தொகுதி தான் கிடைக்கும் நிலை இருக்கும்” எனக் கூறினார்.