சாத்தான்குளத்தில் உயிரிழந்த தந்தை-மகன் குடும்பத்திற்கு தொலைபேசியில் ரஜினிகாந்த் இரங்கல்!

ஜெயராஜ் குடும்பத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

சாத்தான்குளத்தில் விசாரணை கைதிகளான தந்தை – மகன் போலீசாரால் தாக்கப்பட்டதில் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்லப்பட்ட அவர்கள் ஆசனவாயில் ரத்தம் சொட்டிய படி உடலில் பல காயங்களுடன் இறந்தனர். இந்தக் சம்பவத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சாத்தான்குளம் விவகாரத்தில் உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். அது மட்டுமில்லாது திரையுலகை சேர்ந்த பலரும் இந்த விவகாரத்தில் தலையிட்டு நியாயம் கிடைக்க அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

ஆனால் எதிர்கால அரசியல்வாதியாகவும், தற்கால நடிகராகவும் பார்க்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் இந்த விவகாரம் குறித்து எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனால் ரஜினியை சமூகவலைதள வாசிகள் வழக்கம் போல் வறுத்தெடுக்க ஆரம்பித்தனர்.

இந்நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரும் அபிமானியுமான காரத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ” சூப்பர் ஸ்டார் அண்ணன் ரஜினி ஜெயராஜ் குடும்பத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை கண்ட சிலர், ‘ உண்மையில் மனம் வருந்தி பேசியிருந்தால் சரி, அனைவரும் எதிர்ப்பு தெரிவித்துக்காக ஐந்து நாள் கழித்து பேசியிருந்தால் இதை விட கேவலம் ஒன்றும் இல்லை’ என்றும் ‘இத அந்த மனுஷன் சொல்லமாட்டாரோ..?? ட்விட்டர்ல அவரும் தான இருக்காரு…மத்ததுக்கெல்லாம் ட்வீட் போட்றவரு இதுக்கு போய் மாட்டாரோ…?’ என்றும் கூறி வருகின்றனர். இதற்கு ரஜினி ரசிகர்களோ பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Most Popular

ரூ.1.10 கோடி லஞ்சம் வாங்கிய தாசில்தார் கையும் களவுமாக பிடிபட்டார்!! (வீடியோ)

தெலங்கானாவில் ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தாரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். மல்காஜிரி மாவட்டத்தில் உள்ள கீசாரா மண்டலத்தில், ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றிற்கு...

குடும்பத்தினருடன் உங்கள் 2 ஆவது இன்னிங்சை தொடங்க தோனிக்கு சச்சின் வாழ்த்து!

ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்திருந்தார். அதன்பின் டி20மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் தோனி தொடர்ந்து விளையாடி வந்தார். இந்நிலையில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி...

ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பற்ற நாடாகிவிடும்: அதிபர் ட்ரம்ப்

ஜோபிடன் அதிபரானால் அமெரிக்காவில் எவரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு...

தடுப்பு மருந்து உற்பத்தியை தொடங்கியது ரஷ்யா!

ரஷ்யா அறிமுகம் செய்த கொரோனா தடுப்பு மருந்தான 'ஸ்புட்னிக் v' இன் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா தடுப்பு மருந்தினை அறிமுகம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் உலக நாடுகளிடையே...
Do NOT follow this link or you will be banned from the site!