“அண்ணாமலையை கண்டுகொள்ள போவதில்லை; அணை கட்டுவது உறுதி” – கர்நாடக முதல்வர் கடும் விமர்சனம்!

 

“அண்ணாமலையை கண்டுகொள்ள போவதில்லை; அணை கட்டுவது உறுதி” – கர்நாடக முதல்வர் கடும் விமர்சனம்!

கர்நாடக மாநிலம் மேகதாது அருகே பெங்களூருவுக்கு குடிநீர் சப்ளை செய்ய ஏதுவாக 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு மேற்கொண்டுள்ளது. இந்த அணை கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளது. இதனிடையே தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமரையும், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் ஜல்சக்தி துறை அமைச்சரையும் சந்தித்து அணைக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என வலியுறுத்தினர்.

“அண்ணாமலையை கண்டுகொள்ள போவதில்லை; அணை கட்டுவது உறுதி” – கர்நாடக முதல்வர் கடும் விமர்சனம்!

தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும் மேகதாது அணைக்கு எதிராக ஓரணியில் இருக்கின்றனர். அனைவருடைய குரலும் ஒன்றாக ஒலிக்கிறது. ஆனால் தமிழக பாஜகவின் நிலை தான் பரிதாபத்தில் இருக்கிறது. ஏனெனில் கர்நாடகாவில் ஆள்வது பாஜக. இந்த விவகாரத்தில் தமிழக பாஜக என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறது என அரசியல் ரீதியான அழுத்தம் உண்டானது. சொல்லப் போனால் அரசியலில் தனிமைப்படுத்தப்பட்டது. இதையடுத்து புதிதாக தலைவர் பொறுப்பேற்ற அண்ணாமலை, தமிழக பாஜக மேகதாது அணைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் என்று அறிவித்தார்.

“அண்ணாமலையை கண்டுகொள்ள போவதில்லை; அணை கட்டுவது உறுதி” – கர்நாடக முதல்வர் கடும் விமர்சனம்!

அதேபோல கர்நாடக அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் நடத்தப் போவதாகவும் கூறினார். இதனை அப்போதே விமர்சித்த புதிய முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, யார் உண்ணாவிரதம் இருந்தாலும் எனக்கு கவலையில்லை என்றார். முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவை விட அப்போது உள்துறை அமைச்சராக இருந்த பசவராஜ் பொம்மை தான் தமிழ்நாடு அரசை மிகக் கடுமையாக விமர்சித்து வந்தார். முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட முதல் நாளே, “குடிநீர் திட்டத்துக்காகவே மேகதாது அணை கட்டப்படுகிறது. இதைத் திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை. அணையை விரைவில் கட்ட பிரதமர் மோடியிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

“அண்ணாமலையை கண்டுகொள்ள போவதில்லை; அணை கட்டுவது உறுதி” – கர்நாடக முதல்வர் கடும் விமர்சனம்!

இச்சூழலில் இன்று அரசின் தடையை மீறி தஞ்சாவூரில் அண்ணாமலை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். காலையிலேயே மாட்டு வண்டியில் வருகை தந்து உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். தற்போது இதுகுறித்து மறைமுகமாக விமர்சித்துள்ள பசவராஜ் பொம்மை, “மேகதாது அணை கட்டுவதை அரசியல் ரீதியான காரணத்திற்காக ஒருசிலர் எதிர்க்கிறார்கள். யார் எதிர்த்தாலும் எங்களுக்கு அதுகுறித்து சிறு கவலையும் இல்லை. விரைவில் உரிய அனுமதி பெற்று மேகதாது அணையைக் கட்டி முடிப்போம்” என்றார்.