காரைக்கால்: தொழிற்சாலைக்குள் சிறை வைக்கப்பட்ட வட மாநில தொழிலாளர்கள்… அதிரடியாக மீட்ட சப்-கலெக்டர்

 

காரைக்கால்: தொழிற்சாலைக்குள் சிறை வைக்கப்பட்ட வட மாநில தொழிலாளர்கள்… அதிரடியாக மீட்ட சப்-கலெக்டர்

காரைக்காலில் தொழிற்சாலை ஒன்றில் வட இந்திய தொழிலாளர்களை மாவட்ட துணை ஆட்சியர் அதிரடி சோதனை நடத்தி மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்கால்: தொழிற்சாலைக்குள் சிறை வைக்கப்பட்ட வட மாநில தொழிலாளர்கள்… அதிரடியாக மீட்ட சப்-கலெக்டர்காரைக்காலை அடுத்த மேலவஞ்சூரில் தனியார் இரும்பு உருக்காலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த இரும்பு உருக்காலையில் வட மாநிலத் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு மூன்று மாத சம்பளத்தை ஆலை நிர்வாகம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் செல்ல விருப்பம் தெரிவித்த நிலையில் அவர்களை அனுமதிக்கவும் மறுத்துள்ளது.

காரைக்கால்: தொழிற்சாலைக்குள் சிறை வைக்கப்பட்ட வட மாநில தொழிலாளர்கள்… அதிரடியாக மீட்ட சப்-கலெக்டர்காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நிறுவனங்களில் வேலை செய்து வந்த பல வட மாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்பிய நிலையில், இரும்பு ஆலையில் பணியாற்றி வந்தவர்கள் மட்டும் செல்லவில்லை. தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக தங்க வைக்க வேண்டாம், விருப்பப்பட்டால் அனுப்பி வைக்கும்படி ஆலை நிர்வாகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. குறிப்பிட்ட ஆலையில் பணிகள் நடைபெறுவது தெரியவரவே, தொழிலாளர்கள் யாராவது உள்ளார்களா என்று தொழிலாளர் நலத் துறை சார்பில் விசாரிக்கப்பட்டது. அப்போது, வட இந்திய தொழிலாளர்கள் சென்றுவிட்டார்கள். வேறு யாரும் இல்லை என்று நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது.

காரைக்கால்: தொழிற்சாலைக்குள் சிறை வைக்கப்பட்ட வட மாநில தொழிலாளர்கள்… அதிரடியாக மீட்ட சப்-கலெக்டர்இதில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், தொழிற்சாலைக்கு விசாரணை நடத்த சென்றனர். ஆனால், அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொழிற்சாலையில் தொழிலாளர்கள் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து சப் கலெக்டர் பாஸ்கரன் தலைமையில் போலீசார், வருவாய்த் துறை அதிகாரிகள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அந்த ஆலைக்கு சென்றனர். அங்கு சோதனையிட்ட போது சட்டவிரோதமாக தொழிலாளர்கள் அங்கு அடைத்து வைக்கப்பட்டது தெரியவந்தது. சரியான உணவு, சம்பளம் இன்றி பரிதவித்து வந்த தொழிலாளர்களை மீட்டு காரைக்காலுக்கு அழைத்துவந்தனர்.
இது குறித்து ஆலை நிர்வாகத்திடம் சப்-கலெக்டர் பாஸ்கரன் பேசினார். சப் கலெக்டரின் அழுத்தம் காரணமாக தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய மூன்று மாத சம்பளத்தை தர ஆலை நிர்வாகம் ஒப்புக் கொண்டது. காரைக்காலில் இருந்து வட இந்தியாவுக்கு ரயில்கள் இயக்கப்படாததால், அவர்களை பெங்களுருவுக்கு அனுப்பி அங்கிருந்து ரயில் மூலம் வட இந்தியாவுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார். மேலும் ஆலை நிர்வாகத்தின் மீது வழக்குப் பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. காரைக்காலில் தொழிலாளர்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.