மாம்பழத்தை வைத்து சிவபெருமான் நடத்திய லீலைகள்! காரைக்கால் அம்மையார் கோவில் வரலாறு !

மாம்பழத்தை வைத்து சிவபெருமான் நடத்திய லீலைகள் இரண்டு.
அதில் ஒன்று நாரதரை பயன்படுத்தி ஞானமான மாம்பழத்தை வைத்து முருகனுடன் நடத்திய லீலை. இன்னொன்று அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான காரைக்காலம்மையார் உடன் நடத்திய லீலை .

இன்றைய புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் வணிகர் குடும்பத்தில் பிறந்தவர் காரைக்காலம்மையார் அவரது இயற்பெயர் புனிதவதியார் நினைவு தெரிந்த நாளிலிருந்தே புனிதவதியார் சிவன் மீது பக்தி பூண்டு வழிபாடு நடத்தி வந்தார். அவரது பெற்றோர்கள் உரிய காலத்தில் நாகப்பட்டினத்தில் வசித்துவந்த பரமதத்தர் என்ற வணிகருக்கு மண முடித்துக் கொடுத்தனர் காரைக்காலிலேயே இருந்து குடும்பம் நடத்தி வந்தனர்.

ஒருநாள் பரமதத்தன் கடைக்கு வந்த வியாபாரி ஒருவர் தன் தோட்டத்தில் கனிந்த மாம்பழங்களில் இரண்டை மரியாதை நிமித்தமாக பரமதத்தனுக்கு வழங்கி விட்டுச் சென்றார் அவைகளை கடைச் சிப்பந்தி ஒருவரிடம் கொடுத்து ஒருவரிடம் கொடுத்து வீட்டில் கொடுத்துவிட்டு வருமாறு கூறினார் . மாம்பழம் வீடு போய் சேர்ந்தது . புனிதவதி மாம்பழங்களை பெற்று வீட்டில் வைத்திருந்த போது போது ,பிச்சை கேட்டு பசியோடு வந்து சேர்ந்தார் ஒரு சிவனடியார் வீட்டிலோ சமையல் முடிந்தபாடில்லை புனிதவதியாருக்கோ சிவனடியாரை பசியோடு திருப்பி அனுப்ப மனமில்லை . பார்த்தார் கணவன் கடையிலிருந்து அனுப்பிய மாம்பழங்களில் ஒன்றை எடுத்து அந்த சிவனடியாரிடம் கொடுத்து சாப்பிட்டு பசியாறி கொள்ளும்படி கூறினார். சிவனடியாரும் மாம்பழத்தை உண்டுவிட்டு திருப்தியுடன் சென்றார் அங்குதான் சிவபெருமானின் லீலைகள் தொடங்கின.

வழக்கம்போல் உணவு நேரத்திற்கு வீடு வந்தான் பரமதத்தன். அவனுக்கு உணவோடு மீதமிருந்த ஒரு மாம்பழத்தையும் பரிமாறினார் புனிதவதியார். அந்த மாம்பழத்தை சாப்பிட்ட பரமதத்தன், அதன் ருசியால் கவரப்பட்டு பிரமாதமான சுவையாக உள்ளது இன்னொரு மாம்பழத்தையும் எடுத்துக்கொண்டு வா என்று கூறினார் . புனிதவதியார் திடுக்கிட்டுப் போனார் பிரியமுடன் இன்னொரு மாம்பழத்தை கேட்கும் கணவனுக்கு அது இல்லையென எப்படி சொல்வது என்று புரியாமல் உள்ளே சென்று என்ன செய்வேன் இறைவா என்று கை பிசைந்து நின்றபோது அவரது கையில் புதிதாய் ஒரு மாம்பழம் வந்து சேர்ந்தது. சிவனின் கருணையை எண்ணி வியந்த புனிதவதியார். அடுத்து வரப்போகும் நாடகத்தின் காட்சி அறியாதவராக அந்த மாம்பழத்தை கொண்டு சென்று கணவனிடம் அன்போடு வழங்கினார். அதனை கடித்தான் பரமதத்தன் அது முந்தைய மாம்பழத்தை விட மேலும் அதீத சுவையுடன் இருப்பதை உணர்ந்து ஆச்சரியப்பட்டார் . இது அதை விட சுவையாக உள்ளதே என்று கூறியவன் சட்டென யோசித்தான் மாம்பழம் கொடுத்த வியாபாரி இரண்டு மாம்பழங்களும் ஒரு மரத்துப் பழம் என்றாரே..! ஒரு மரத்து கனிகளில் இருவேறு சுவை வருமோ என நினைத்தான் .

புனிதவதியாரிடம் இரண்டும் நான் இரண அனுப்பி வைத்தவை தானே? அதில் இருவேறு சுவை இருக்கிறதே எப்படி என்றான். பொய் சொல்ல மனமில்லாத புனிதவதியார் நடந்த உண்மைகளை நயம்படக் கூறினார்.
அதனை நம்ப மறுத்து பரமதத்தன் இரண்டாவது மாம்பழம் ஈசன் அருளால் கிடைத்தா? அப்படியானால் இன்னொரு மாம்பழத்தை கொண்டு கொண்டு வா பார்க்கலாம் என்றான்.

ஆடிப்போன அம்மையார் சிவனை சோதிப்பதாக என்று மனம் நொந்தார். ஆயினும் இதுவும் அவன் விளையாட்டு என்று கருதி சிவபெருமானை தியானித்தார். அவரது கையில் வந்து விழுந்தது இன்னொரு மாம்பழம் . அதனை கொண்டு வந்து கணவன் கையில் கொடுக்கவே அவன் அதை அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அந்த மாம்பழம் திடீரென மாயமாய் மறைந்து போனது.வந்தது வினை. பயந்துபோன பரமதத்தன் தனது மனைவி ஒரு மாய பெண்ணோ? அல்லது தெய்வாம்சம் மிக்கவளோ? என்று எண்ணினான். இப்படிப்பட்டவளுடன் வாழ்வது சாத்தியம் தானா என சிந்தித்தான்.

நாட்கள் நகர்ந்தன மனதை அரிக்கும் பிரச்சனையில் இருந்து விடுபட நினைத்த பரமதத்தன் ஒருநாள் வியாபார நிமித்தமாக வெளிநாடு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டார். போனவன் திரும்பி வருவான் என எதிர்பார்த்திருந்தார் புனிதவதியார் ஏமாற்றமே மிஞ்சியது. அவன் இருக்கும் இடத்தை உறவினர்கள் தேடத் தொடங்கினார் .

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை ....

அவன் மதுரையில் இருப்பதாக தகவல் கிடைக்கவே புறப்பட்டுப் போனார் புனிதவதியார். ஆனால் அவனோ அங்கு வேறு பெண்ணை மணந்து கொண்டு வாழ்ந்ததுடன் ஒரு பெண் குழந்தைக்கும் தந்தையாகி இருந்தான்.
அந்த குழந்தைக்கு புனிதவதி என்றும் பெயர் சூட்டி இருந்தான். அங்கு சென்ற புனிதவதியாரைக் கண்டதும், அவன் குடும்பத்தோடு காலில் விழுந்து ஆசி வேண்டினான்.

கணவன் காலில் விழுவதை கண்டு கலங்கிய அம்மையார். ஈசனை வேண்டி இளமை பொங்கும் அழகு திருவுரும் நீங்கப்பெற்று பேய் உருவை அளிக்குமாறு வழிபாடு நடத்தினார்.

அதனை இங்கு ‘இவன் குறித்து கொள்கை இது இவனுக்காக தாங்கிய வனப்பு நின்ற தசை புதி புதி கழிந்து இங்கு உன்பால் அங்கு நின் நின் தாள்கள் போற்றும் பேய் வடிவு அடியேனுக்கு பாங்குற வேண்டும் என்று பரமர் தாள் பரவி நின்றார் காரைக்கால் அம்மையார்’ என்று விளக்குகிறார் பெரியபுராணம் எழுதிய சேக்கிழார் பெருமான்.

புனிதவதியார் வேண்டயபடி சிவன் பேரருளால் அம்மையாரது உடம்பில் இருந்த தசைகள் உதிர்ந்து அதனால் அமைந்த அழகு திருஉரு நீங்கி எலும்புக் கூடாய் பேய் வடிவம் பெற்றார். அது வானுலகும் மண்ணுலகும் வணங்கத்தக்க சிவகணம் போல் ஆயிற்று. ஈசனின் அருளுக்கு இலக்கான அம்மையார் அப்பொழுதிலிருந்து ஈசன் அருளால் பாடல்கள் தொகுப்பில் இடம் பெற்றதுடன், அம்மையார் பாடிய பாடல்கள் மூத்த திருப்பதிகம் என்றும் போற்றப்படுகின்றன.அம்மையார் அருளிச் செய்த அற்புதத் திருவந்தாதியும் திரு இரட்டை மணிமாலையும் ஈசனின் அருள் கோலங்களை அழகுற விளக்குமாறு அமைந்துள்ளன.

பேய் வுரு பெற்ற பெண் புனிதவதியார் சிவனை தரிசிக்க அவன் உறைவதாக கூறப்படும் கைலாய மலை நோக்கிச் சென்றார்.அதில் வியப்பு என்னவென்றால் எல்லோரும் காலால் நடந்து செல்லும் மலைக்கு அம்மையார் ஈசன் இருக்கும் இடம் இது என எண்ணி காலால் மிதிக்க லாகாது என்று தலையால் நடந்து சென்றார்.அதனைக் கண்ட பார்வதிதேவியார் தலையால் நடந்து ஏறிவரும் ஓர் எலும்பு உடம்பு பெற்ற இதன் அன்புதான் என்னே? என்று வியந்தார்.

சிவபெருமான் இங்கு வரும் இவள் நம்மை பேணி போற்றும் அம்மை கான் பெருமைமிகு பேய் வடிவத்தை அவளே வேண்டி பெற்றாள் என்று கூறினார் . அகிலமெல்லாம் படைத்து அருளாட்சி செய்து வரும் வரும் சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப் பெற்ற பெருமையை பெற்றார் காரைக்கால் அம்மையார். அம்மையாருக்கு காட்சியளித்த ஈசன்

அம்மையே நீ வேண்டும் வரம் யாது எனக் கேட்டார் அதற்கு காரைக்காலம்மையார் ‘ஈசனே உன்னிடம் என்றும் நீங்காத இன்ப அன்பு வேண்டும். மற்றும் பிறவாமை வேண்டும் . ஒருகால் பிறப்பு இருக்குமேயானால் என்றும் உன்னை மறவாமை வேண்டும். நீர் மகிழ்ந்தாடும் போது உன் திருவடிக்கு இருந்து பாடும் அருள் செய்ய வேண்டும்’ என்றார்.

சிவபெருமான், ‘தென்திசையில் பழையனூர் எடுத்த திருவாலங்காட்டில் நானாடும் திருவாலங்காட்டில் நானாடும் நடனத்தை கண்டு எப்பொழுதும் என் திருவடிக்கீழ் பாடிக்கொண்டு இருப்பாயாக’ என்று அருளிச் செய்தார்

இந்த திருவேலங்காடு திருத்தலம் திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் அருகே உள்ளது சென்னையிலிருந்து பேருந்து மார்கமாக செல்லலாம்.

திருவாலங்காடு காரைக்கால் அம்மையாருக்கு முக்தி திருத்தலம் என்றால், புதுச்சேரியில் உள்ள காரைக்கால் அம்மையார் பிறந்து வளர்ந்த வாழ்ந்த தலமாகும். காரைக்காலுக்கு நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து பேருந்து மார்க்கமாக எளிதில் செல்லலாம்.

காரைக்காலில் அம்மையாருக்கு என தனி ஆலயமும் அமைந்துள்ளது . சிவாலயம் முறைப்படி இங்கு பூஜை சம்பிரதாயங்களும் நடைபெறுகின்றன. புனிதவதியாருடன் சிவன் நிகழ்த்திய மாம்பழ லீலைகளை நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் நடைபெறும் மாங்கனித் திருவிழா காரைக்காலில் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். ஆனி பௌர்ணமி தினத்தில் நடைபெறும் பங்குனித் திருவிழா அப்பகுதி மக்களால் பெரும் விமர்சையாக கொண்டாடப்படும் ஒரு விழா. இந்த ஆண்டு (2020 ) ஆனி பௌர்ணமி ஜூன் 4ஆம் தேதி வருகிறது எனினும் கொரானா ஊரடங்கு காரணமாக விழாவை சுருக்கமாக கொண்டாடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

வீதி உலா உள்ளிட்டவை இல்லாமல் ஆலயத்தின் உள்ளேயே விழாவை நடத்திக் கொள்ள புதுச்சேரி அரசு அனுமதி வழங்கியுள்ளது 63 நாயன்மார்களில் காரைக்கால் அம்மையார் மட்டுமே அமர்ந்த நிலையில் காட்சி தரும் நாயனார் ஆவார் .

அம்மையாரின் பக்தி பதிகங்கள் நெஞ்சில் ஆன்மீகச் சுரப்பை அதிகப்படுத்தி நம்மை இறை நிலைக்கு இட்டுச் செல்லும் மார்க்கமாக அமைந்துள்ளன . தாயே என்று ஈசனால் அழைக்கப்பட்ட அம்மையாரின் அருள் அவரது பாடல்கள் நம்மை என்றும் சிவனின் பாதம் நோக்கி வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன.

-சுந்தரமூர்த்தி

Most Popular

ரூ.1.10 கோடி லஞ்சம் வாங்கிய தாசில்தார் கையும் களவுமாக பிடிபட்டார்!! (வீடியோ)

தெலங்கானாவில் ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தாரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். மல்காஜிரி மாவட்டத்தில் உள்ள கீசாரா மண்டலத்தில், ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றிற்கு...

குடும்பத்தினருடன் உங்கள் 2 ஆவது இன்னிங்சை தொடங்க தோனிக்கு சச்சின் வாழ்த்து!

ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்திருந்தார். அதன்பின் டி20மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் தோனி தொடர்ந்து விளையாடி வந்தார். இந்நிலையில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி...

ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பற்ற நாடாகிவிடும்: அதிபர் ட்ரம்ப்

ஜோபிடன் அதிபரானால் அமெரிக்காவில் எவரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு...

தடுப்பு மருந்து உற்பத்தியை தொடங்கியது ரஷ்யா!

ரஷ்யா அறிமுகம் செய்த கொரோனா தடுப்பு மருந்தான 'ஸ்புட்னிக் v' இன் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா தடுப்பு மருந்தினை அறிமுகம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் உலக நாடுகளிடையே...
Do NOT follow this link or you will be banned from the site!