• August
    25
    Sunday

Main Area

Main



கோடிக்கணக்கான செலவில் ‘காப்பான்’இசை வெளியீடு| சூர்யாவின் அடுத்த அஸ்திரம்

‘காப்பான்’இசை வெளியீடு
‘காப்பான்’இசை வெளியீடு
Loading...

சூர்யாவின் என்.ஜி.கே. படம் வசூல் ரீதியாக தோல்வியைத் தழுவிய நிலையில், அடுத்த உடனடி ஹிட் கொடுக்கும் முயற்சியில் ‘காப்பான்’ படத்தின் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார். இந்நிலையில் சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பான அறிவிப்பை லைக்கா புரொடக்‌ஷன்ஸ் வெளியிட்டுள்ளது.

kappan

கே.வி.ஆனந்த் - சூர்யா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் `காப்பான்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. ‘காப்பான்’ படத்தில் மோகன்லால் பிரதமராக நடித்துள்ளார். பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடித்துள்ளார். சூர்யா ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி என பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். 

ஏற்கெனவே கே.வி.ஆனந்த் - சூர்யா கூட்டணியில் ரிலீஸான படங்கள் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது போலவே ‘காப்பான்’ படத்திற்கும் ரசிகர்களிடையேவும், திரைப்பட வட்டாரத்திலும் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ramachandra convention center

இந்நிலையில் ‘காப்பான்’ படத்தின் இசை வெளியீடு இம்மாதம் 21ம் தேதி திருவான்மியூரில் இருக்கும் ஸ்ரீ ராமசந்திரா கன்வென்ஷன் ஹாலில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியும், கே.வி.ஆனந்துக்கு நெருக்கமான இயக்குநர் ஷங்கரும் கலந்துக் கொள்ளவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில், அரசின் கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,  முதல் முறையாக தனது பட விழாவிற்கு, தனது ரசிகர்களுக்கும் பிரத்யேகமாக அழைப்பு விடுத்திருக்கிறார் சூர்யா. இந்நிகழ்வில் பெருமளவில் சூர்யாவின் ரசிகர்களும் கலந்துக் கொள்ளவிருக்கிறார்கள். படத்தைப் பற்றி மட்டுமல்லாமல், ஏற்கெனவே தனக்கெதிராக பேசிய அரசியல் தலைவர்களுக்கான பதிலையும் இந்த விழாவில் சூர்யா பேசுவார் என்கிற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உற்சாகமாகியிருக்கிறார்கள்.  

ramachandra convention

2500 பேருக்கும் மேல் அமர்ந்து பார்க்கக் கூடிய வசதியுள்ள இந்த அரங்கின் ஒரு நாள் வாடகை மட்டும் 19 லட்சம் ரூபாய். தொடர்ந்து மூன்று தினங்களுக்கு இந்த அரங்கை ‘காப்பான்’ படத்தின் ஆடியோ ரிலீஸுக்காக எடுத்திருக்கிறார்கள். அரங்கின் வாடகையே கிட்டத்தட்ட கோடியை தொடும் நிலையில், நிகழ்ச்சிக்கான செட் போடும் பணிகள், நிகழ்ச்சி ஏற்பாடு என்று முதல் முறையாக நடிகர் சூர்யாவின் படத்தின் ஆடியோ விழாவின் பட்ஜெட் சில கோடிகளைத் தாண்டிச் செல்கிறது. 

kappan

ஏற்கெனவே, 'காப்பான்' படத்தின் சிங்கிள் டிராக் 'சிறுக்கி' பாடல் ரிலீசாகி ஹிட்டடித்த நிலையில், இப்படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.