ரூ. 5 லட்சத்துடன் ‘கப்பலோட்டிய தமிழன் விருது’ – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

 

ரூ. 5 லட்சத்துடன் ‘கப்பலோட்டிய தமிழன் விருது’ – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

வ.உ.சிதம்பரனார் நினைவுநாள் தியாக திருநாளாகவும், ஆண்டுதோறும் வ.உ.சிதம்பரனார் விருது வழங்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ரூ. 5 லட்சத்துடன் ‘கப்பலோட்டிய தமிழன் விருது’ – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110ன்கீழ் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் , தூத்துக்குடியில் உள்ள பெரிய காட்டன் சேலை வ.உ.சி சாலை என பெயர் மாற்றப்படும் என்று அறிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் வ.உ.சி150-ஆவது பிறந்த நாளையொட்டி புதிய அறிவிப்புகளை பேரவையில் வெளியிட்டார். அதில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வ.உ.சி பெயரில் புதிய ஆய்வறிக்கை வெளியிடப்படும், நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் ஓராண்டுக்கு கட்டப்படும் அரசு கட்டடங்களுக்கு வ.உ.சி பெயர்சூட்டப்படும், கப்பல் தொடர்பான துறைகளில் சிறந்த பங்காற்றி வரும் தமிழருக்கு ஆண்டுதோறும் வ.உ.சி பெயரில் “கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி விருது” வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

ரூ. 5 லட்சத்துடன் ‘கப்பலோட்டிய தமிழன் விருது’ – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

முன்னதாக பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின் அயோத்திதாசர் அவர்களின் 175வது ஆண்டு விழாவின் நினைவாக வடசென்னை பகுதியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.எழுத்தாளர் ,ஆய்வாளர், வரலாற்று ஆசிரியர், மானுடவியல் ,சிந்தனையாளர் ,பதிப்பாளர், பத்திரிக்கையாளர் ,மருத்துவர் ,பேச்சாளர் ,மொழியியல் வல்லுனர், பன்மொழிப்புலவர், புதிய கோட்பாட்டாளர், சிறந்த செயல்பாட்டாளர் என பன்முக ஆற்றல் கொண்ட அயோத்திதாச பண்டிதர் நினைவாகவும், அவரது அறிவை வழங்கும் விதமாகவும் வடசென்னை பகுதியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்