இன்று கட்சி தொண்டர்களால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை… காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல்

இன்று கட்சி தொண்டர்களால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை… காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல்

தேர்தல் தோல்விகளால், இன்று எங்க கட்சி தொண்டர்களால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் கூறியுள்ளார்.

பீகார் சட்டப்பேரவை தேர்தல், சில மாநிலங்களில் இடைத்தேர்தல்களில் காங்கிரசின் செயல்பாடுகள் மோசமாக இருந்ததாக அந்த கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் கூறினார். இதற்கு அந்த கட்சியை சேர்ந்த அசோக் கெலாட் உள்பட சில தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கபில் சிபலோ தன்னுடைய கருத்தில் உறுதியாக உள்ளார். அண்மையில் கபில் சிபல் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இன்று கட்சி தொண்டர்களால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை… காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல்
கபில் சிபல்

கடந்த 18 மாதங்களாக கட்சிக்கு முழு நேர தலைவர் இல்லாதபோது உங்களால் எப்படி திறமையான எதிர்க்கட்சியாக இருக்க முடியும். ஏன் நாங்கள் தோற்றோம் என்று கட்சியில் பேச்சுவார்த்தை கூட இல்லை. நான் காந்தி குடும்பத்துக்கு எதிரானவன் அல்ல. கட்சியின் செயல் மற்றும் தேர்தல் செயல்பாடுகள் குறித்து பேசும் வரை நான் தொடர்ந்து கேள்விகளை எழுப்புவேன்.இன்று, காங்கிரஸ் தொண்டர்களால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது.

இன்று கட்சி தொண்டர்களால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை… காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல்
சோனியா, ராகுல் காந்தி

அவர்கள் எதிர்க்கொள்ளும் கேள்வி: உங்க கட்சிக்கு என்னாச்சு? அவர்களின் உணர்வுகளுக்கு என்ன? எனது உணர்வுகளும் புண்பட்டுள்ளன. நான் மில்லியன் கணக்கான காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளை பற்றி பேசுகிறேன். நான் யாருக்கும் சவால் விடவில்லை. நாளையே மாற்றங்கள் நிகழந்து விடாது என்பது எங்களுக்கு தெரியும். நாங்கள் 2014, 2019ல் தோற்றோம். (உள்) தேர்தல்களால் மாற்றங்கள் நிகழாது. நாம் மக்களிடம் செல்ல வேண்டும், காங்கிரஸ் சித்தாந்தம் என்ன என்பதை அவர்களிடம் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.