பிரதமர் மோடி கூறியதை வரவேற்கிறேன்.. ஆனால் உதவி எந்த குறிப்பிட்ட மதத்தினருக்கும் மட்டுப்படுத்தக்கூடாது.. காங்கிரஸ்

பிரதமர் மோடி கூறியதை வரவேற்கிறேன்.. ஆனால் உதவி எந்த குறிப்பிட்ட மதத்தினருக்கும் மட்டுப்படுத்தக்கூடாது.. காங்கிரஸ்

பிரதமர் மோடி கூறியதை வரவேற்கிறேன் ஆனால் உதவி எந்த குறிப்பிட்ட மதத்தினருக்கும் மட்டுப்படுத்தப்படக்கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் வலியுறுத்தினார்

பிரதமர் நரேந்திர மோடி நேற்று அமிர்தசரஸில் உள்ள புதுப்பிக்கப்பட்ட ஜாலியன்வாலா பாக் நினைவிட வளாகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதன் பிறகு பிரதமர் மோடி பேசுகையில், இன்று, உலகில் எந்த ஒரு இந்தியனும் சிக்கலில் இருந்தால், இந்தியா அவருக்கு முழு பலத்துடன் உதவி செய்கிறது. அது கொரோனா காலம் அல்லது ஆப்கானிஸ்தான் நெருக்கடிய இருந்தாலும், உலகம் அதை தொடர்ச்சியாக அனுபவித்தது. ஆப்கானிஸ்தானிலிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் ஆபரேஷன் தேவி சக்தியின் கீழ் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர் என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடி கூறியதை வரவேற்கிறேன்.. ஆனால் உதவி எந்த குறிப்பிட்ட மதத்தினருக்கும் மட்டுப்படுத்தக்கூடாது.. காங்கிரஸ்
ஆப்கனிலிருந்து இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்ட மக்கள்

பிரதமர் மோடியின் இந்த பேச்சை காங்கிரஸ் வரவேற்றுள்ளது. அதேசமயம், உதவி எந்த குறிப்பிட்ட மதத்தினருக்கும் மட்டுப்படுத்தப்படக்கூடாது என்று அந்த கட்சி வலியுறுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் இது தொடர்பாக கூறியதாவது: இந்து, ஆப்கானிஸ்தானியன் அல்லது வேறு யாராக இருந்தாலும் துன்புறுத்தப்படும் எவருக்கும், உதவுவதும், பாதுகாப்பதும் நமது அரசியலமைப்பு கடமையாகும்.

பிரதமர் மோடி கூறியதை வரவேற்கிறேன்.. ஆனால் உதவி எந்த குறிப்பிட்ட மதத்தினருக்கும் மட்டுப்படுத்தக்கூடாது.. காங்கிரஸ்
கபில் சிபல்

பிரதமர் மோடி கூறியதை நான் வரவேற்கிறேன். ஆனால் அதே சமயத்தில், அது ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களுக்கு கட்டுப்படுத்தப்படக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து, அந்நாடு நெருக்கடியில் சிக்கியுள்ளது, இதனால் அங்கிருந்து கடந்த சில தினங்களாக பல இந்தியர்கள் மற்றும் ஆப்கன் மக்களை மத்திய அரசு அங்கிருந்து அழைத்து வந்தது.