அரசு பள்ளிகளிலிருந்து தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்வது ஏன்?… ஆம் ஆத்மிக்கு பதில் சவால் விட்ட பா.ஜ.க.

அரசு பள்ளிகளிலிருந்து தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்வது ஏன்?… ஆம் ஆத்மிக்கு பதில் சவால் விட்ட பா.ஜ.க.

டெல்லியில் அரசு பள்ளிகளிலிருந்து வெளியேறி தனியார் பள்ளிகளில் சேருவது ஏன் அதிகரித்து வருகிறது. இதற்கு மக்களிடம் பதில் சொல்லுங்க என்று ஆம் ஆத்மிக்கு பா.ஜ.க. சவால் விடுத்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் பள்ளி குழந்தைகளுக்கு நல்ல கல்வியை வழங்க முடியவில்லையென்றால் பதவியிலிருந்து விலகுமாறு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சாடிய டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவுக்கு பா.ஜ.க.வின் கபில் மிஸ்ரா பதிலடி மற்றும் சவால் விடுத்துள்ளார். டெல்லி பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் மிஸ்ரா டிவிட்டரில்:

அரசு பள்ளிகளிலிருந்து தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்வது ஏன்?… ஆம் ஆத்மிக்கு பதில் சவால் விட்ட பா.ஜ.க.
கபில் மிஸ்ரா

மனிஷ் சிசோடியாவிடம் டெல்லியின் தோல்வியுற்ற கல்வி முறை குறித்து 10 நேரடியான கேள்விகள். இதற்கு முன் நீங்கள் உத்தர பிரதேச மக்களிடம் பொய் சொன்னீர்கள். இந்த பத்து கேள்விகளுக்கு பொது மக்களுக்கு நீங்கள் பதிலளிப்பதே எனது சவால். டெல்லியில் கல்வி புரட்சி அல்ல விளம்பர புரட்சி என்று பதிவு செய்து இருந்தார். மேலும் டெல்லி கல்வி துறை தொடர்பாக 10 கேள்விகள் அடங்கிய அறிக்கையையும் அதில் பதிவேற்றம் செய்து இருந்தார்.

அரசு பள்ளிகளிலிருந்து தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்வது ஏன்?… ஆம் ஆத்மிக்கு பதில் சவால் விட்ட பா.ஜ.க.
டெல்லி பள்ளி

அந்த அறிக்கையில், கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளிகளிலிருந்து தனியார் பள்ளிகளுக்கு மாறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டெல்லி அரசு வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையின் புள்ளிவிவர அறிக்கையில் இதற்கு ஆதாரம் உள்ளது. அந்த அறிக்கையின்படி, அரசு பள்ளிகளிலிருந்து 1.40 லட்சம் மாணவர்கள் ஏன் தனியார் பள்ளிகளில் சேர்ந்தது ஏன்? 2014ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது அரசு பள்ளிகளில் 12வது வகுப்பு வாரிய தேர்வில் 42 ஆயிரத்துக்கும் குறைவான மாணவர்கள் தேர்ச்சி பெற்றது ஏன்? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை அதில் கேட்டு இருந்தார்.