தெரியாமல் சேர்த்து விட்டோம்… ஷாஹீன் பாக்கில் துப்பாக்கி சூடு நடத்திய கபில் குர்ஜாரை கட்சியிலிருந்து நீக்கிய பா.ஜ.க.

தெரியாமல் சேர்த்து விட்டோம்… ஷாஹீன் பாக்கில் துப்பாக்கி சூடு நடத்திய கபில் குர்ஜாரை கட்சியிலிருந்து நீக்கிய பா.ஜ.க.

ஷாஹீன் பாக் போராட்ட பகுதியில் துப்பாக்கி சூடு நடத்திய கபில் குர்ஜாரை கட்சியில் சேர்த்த சிறிது நேரத்தில் பா.ஜ.க. நீக்கியுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் பெண்கள் 2019 டிசம்பர் முதல் பல மாதங்களாக போராட்டத்தை நடத்தினர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வீதிகளில் பெண்கள் அமர்ந்து போராடினர். கொரோனோ வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக அந்த போராட்டம் கடந்த மார்ச் மாதத்தில் முடிவுக்கு வந்தது. பெண்கள் நடத்திய இந்த போராட்டம் நாடு முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

தெரியாமல் சேர்த்து விட்டோம்… ஷாஹீன் பாக்கில் துப்பாக்கி சூடு நடத்திய கபில் குர்ஜாரை கட்சியிலிருந்து நீக்கிய பா.ஜ.க.
பா.ஜ.க.வில் இணைந்த கபில் குர்ஜார்

கடந்த பிப்ரவரி 1ம் தேதியன்று ஷாஹீன் பாக் பகுதிக்கு வந்த கபில் குர்ஜார் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டு துப்பாக்கியால் வானத்தை நோக்கி 2 முறை சுட்டார். பின் நம் நாட்டில் இந்துக்கள் மட்டுமே பேச வேண்டும், வேறு யாரும் கூடாது என்று கூறினார். இந்த சம்பவம் நடந்த ஒரு நாள் கழித்து கபில் குர்ஜார் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலுக்கு அனுப்பட்டார். போலீஸ் விசாரணையின்போது, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டம் காரணமாக சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து காரணங்களால் கோபம் அடைந்து அங்கு சென்றதாக கபில் குர்ஜார் தெரிவித்து இருந்தார்.

தெரியாமல் சேர்த்து விட்டோம்… ஷாஹீன் பாக்கில் துப்பாக்கி சூடு நடத்திய கபில் குர்ஜாரை கட்சியிலிருந்து நீக்கிய பா.ஜ.க.
பா.ஜ.க.

இந்த கபில் குர்ஜார்தான் தற்போது பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். காஜியாபாத் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் முன்னிலையில் கபில் குர்ஜார் அந்த கட்சியில் இணைந்தார். பா.ஜ.க. இணைந்தது தொடர்பாக கபில் குர்ஜார் கூறுகையில், கட்சி இந்துத்துவாவுக்காக பணியாற்றுவதால் நான் பா.ஜ.க.வில் சேர முடிவு செய்தேன் என்று தெரிவித்தார். குர்ஜார் பா.ஜ.க.வில் இணைந்த சிறிது நேரத்தில் அவரை கட்சியிலிருந்து பா.ஜ.க நீக்கி விட்டது. இது தொடர்பாக காஜியாபாத் பா.ஜ.க தலைவர் சஞ்ஜீவ் சர்மா கூறுகையில், குர்ஜார் தொடர்பான ஷாஹீன்பாக் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து முதலில் எங்களுக்கு தெரியாது என்று தெரிவித்தார்.