கபில் தேவ் : சிகிக்சைக்குப் பிறகு நலம் – போட்டோ வெளியீடு

 

கபில் தேவ் : சிகிக்சைக்குப் பிறகு நலம் – போட்டோ வெளியீடு

இந்திய கிரிக்கெட்டின் முகமாகத் திகழ்பவர் கபில்தேவ். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ்க்கு நேற்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது.

உடனடியாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் கபில்தேவ். அவரின் நிலையை சோதித்து, ஆன்ஜியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால், அவர் நலத்துக்குத் திரும்பி வருகிறார். விரைவில் அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார்.

கபில் தேவ் : சிகிக்சைக்குப் பிறகு நலம் – போட்டோ வெளியீடு

கபில்தேவ்க்கு உடல்நிலை சரியில்லாமல் போனவுடன் கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் அவர் விரைவில் நலமடைய வேண்டும் என பிரார்த்தனை தெரிவிக்கும் செய்திகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தனர். அவருக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக கபில்தேவ் தம்ஸ் அப் காட்டியபடியான போட்டோவை வெளியிட்டிருக்கிறார். தனக்காக பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

கபில் தேவ் : சிகிக்சைக்குப் பிறகு நலம் – போட்டோ வெளியீடு

இந்திய கிரிக்கெட் அணிக்கு 1983 -ம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலககோப்பையை வென்றது கபில்தேவ் தலைமையிலான அணியால்தான். முதலில் ஆடிய இந்திய அணி 183 ரன்களுக்குள் சுருண்டி விட, வெஸ்ட் இண்டிஸை 140 ரன்களுக்குள் சுருட்டியது கபில்தேவ் கேப்டன்ஷிப்பும் பவுலர்களின் திறமையும்தான்.