கபில்தேவ்க்கு மாரடைப்பு – மருத்துவமனையில் அவசர சிகிச்சை!

கபில்தேவ்க்கு  மாரடைப்பு – மருத்துவமனையில் அவசர சிகிச்சை!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ஆல்ரவுண்டருமான கபில்தேவ்க்கு திடிரென்று மாரடைப்பு ஏற்பட்டது.

இந்திய கிரிக்கெட் அணிக்கு 1983 -ம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலககோப்பையை வென்றது கபில்தேவ் தலைமையிலான அணியால்தான். முதலில் ஆடிய இந்திய அணி 183 ரன்களுக்குள் சுருண்டி விட, வெஸ்ட் இண்டிஸை 140 ரன்களுக்குள் சுருட்டியது கபில்தேவ் கேப்டன்ஷிப்பும் பவுலர்களின் திறமையும்தான்.

கபில்தேவ்க்கு  மாரடைப்பு – மருத்துவமனையில் அவசர சிகிச்சை!

இன்னும் பல வெற்றிகளை கிரிக்கெட்டில் இந்தியாவுக்குப் பெற்றுத்தந்தவர் கபில்தேவ். அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி வரவே டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாகவும் உறுதி செய்யப்படாத செய்திகள் வெளியாகியுள்ளன.

கபில்தேவ்க்கு  மாரடைப்பு – மருத்துவமனையில் அவசர சிகிச்சை!

என்ன விதமான சிகிச்சையாக இருந்தாலும் அவர் மீண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும். ஏனெனில், அவர் சிறந்த விளையாட்டு வீரர் மட்டுமல்ல, பலருக்கும் குறிப்பாக இளைஞர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்.