குடும்பமா பாருங்க! க/பெ ரணசிங்கத்துக்கு ‘யு’ சான்றிதழ்!!

 

குடும்பமா பாருங்க! க/பெ ரணசிங்கத்துக்கு ‘யு’ சான்றிதழ்!!

நடிகர் விஜய் சேதுபதி – நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள படம் ‘க/பெ. ரணசிங்கம்’. இயக்குநர் விருமாண்டி இயக்கியுள்ள இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இதில் ‘பூ’ ராம், ரங்கராஜ் பாண்டே, வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படமான க/பெ.ரணசிங்கம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதியின் க/பெ. ரணசிங்கம் படமும் ஓடிடி மற்றும் டிடிஹெச் தளத்தில் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை ஓடிடியில் ஒரு முறை பார்ப்பதற்காக 199 ரூபாய் கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தற்போது க/பெ ரணசிங்கம் படத்துக்கு யு சான்றிதழை வழங்கியுள்ளது தணிக்கை குழு.