விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம்! அக்.2 ஆம் தேதி ஓடிடி, டிடிஹெச்-இல் ரிலீஸ்!!

 

விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம்! அக்.2 ஆம் தேதி ஓடிடி, டிடிஹெச்-இல் ரிலீஸ்!!

நடிகர் விஜய் சேதுபதி – நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள படம் ‘க/பெ. ரணசிங்கம்’. இயக்குநர் விருமாண்டி இயக்கியுள்ள இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இதில் ‘பூ’ ராம், ரங்கராஜ் பாண்டே, வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதியின் க/பெ. ரணசிங்கம் படமும் ஓடிடி மற்றும் டிடிஹெச் தளத்தில் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

ஓடிடி படம் வெளியாவது என்பது இன்றைய காலக்கட்டத்தில் வழக்கமான ஒன்றாக மாறியுள்ள நிலையில் ஓடிடி பிளாட்ஃபார்மான zeeplex- இல் 5 மொழிகளில்,150 நாடுகளில் வெளியாகும் முதல் படம் க/பெ. ரணசிங்கம் என்ற பெருமையை இப்படம் தட்டி சென்றுள்ளது.