கன்னியாகுமரி- சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல் – சிக்கிய போலி சுகாதார ஆய்வாளர்

 

கன்னியாகுமரி- சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல் – சிக்கிய போலி சுகாதார ஆய்வாளர்

கன்னியாகுமரி

குமரி மாவட்டம் நித்திரவிளை சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா பரிசோதனை செய்வதாக கூறி வீட்டில் தனியாக இருக்கும் சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட போலி சுகாதார ஆய்வாளர் கைதுசெய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை, புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகளில் டிப்டாப் ஆசாமி ஒருவர், அரசு சுகாதார ஆய்வாளர் என்று கூறி கொண்டு வீடுகளுக்கு சென்று கொரோனா சோதனை என்ற பெயரில் தனியாக இருக்கும் சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதாக புகார்கள்

கன்னியாகுமரி- சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல் – சிக்கிய போலி சுகாதார ஆய்வாளர்

எழுந்தன. பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க முன்வராததால், அவரது நடவடிக்கைகள் தொடர்ந்து வந்துள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் இதேபோன்று பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரின், பெற்றோர் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதனையடுத்து அந்த பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார், அங்குள்ள ஒரு வீட்டிற்குள் சுகாதார ஆய்வாளர் என கூறி நுழைய முயன்ற நபரை சுற்றிவளைத்து கைதுசெய்தனர்.பின்னர் அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவர் கொல்லம்கோடை சேர்ந்த அபிலாஷ் பெர்லின் என்பதும், 41 வயதான இவர் தனியார் வங்கியில் கடன் வசூலிப்பவராக

கன்னியாகுமரி- சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல் – சிக்கிய போலி சுகாதார ஆய்வாளர்

இருப்பதும் தெரியவந்தது. மேலும் கொரோனா காலகட்டத்தை பயன்படுத்தி சுகாதார ஆய்வாளர் என கூறிக்கொண்டு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சோதனை செய்ய செல்வது போன்று சென்று, வீடுகளில் தனியாக இருக்கும் சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அபிலாஷ் பெர்லின் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார், நாகர்கோவில் மகிளா நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அபிலாஷுக்கு கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்ற நிலையில் இவரது நடவடிக்கை சரியில்லாததால் ஓரிரு மாதங்களில் மனைவி பிரிந்து சென்றுள்ளார்.