‘பிப்ரவரி 15 வரை தான் ரஜினிக்கு டைம்’ – ‘தலைவருக்கு’ கெடு விதிக்கும் ‘நிர்வாகி’!

 

‘பிப்ரவரி 15 வரை தான் ரஜினிக்கு டைம்’ – ‘தலைவருக்கு’ கெடு விதிக்கும் ‘நிர்வாகி’!

நடிகர் ரஜினி தான் அரசியலுக்கு வர மாட்டேன் என திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். வெளிப்படையான அறிக்கையே அதற்குச் சாட்சி. அவரின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு அம்முடிவை எடுத்ததாகக் குறிப்பிட்ட அவர், யாரும் தன்னை கட்சி ஆரம்பிக்க தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கிளியராக சொல்லிவிட்டார். கட்சி ஆரம்பிக்கும் முடிவை அவர் விட்டுவிட்டாலும் அவரது ரசிகர்களும் மக்கள் மன்ற நிர்வாகிகளும் விடுவதாயில்லை. போராட்டத்தில் ஈடுபட்டு ரஜினி அரசியலுக்கு வர அழைத்தனர். ஆனால், ரஜினி மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டு தன்னை மேலும் புண்படுத்த வேண்டாம் என்று கூறினார்.

‘பிப்ரவரி 15 வரை தான் ரஜினிக்கு டைம்’ – ‘தலைவருக்கு’ கெடு விதிக்கும் ‘நிர்வாகி’!

இச்சூழலில் ரஜினி அரசியலில் ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாகவும், அவர் கட்சி தொடங்கப்போவதாகவும் மக்கள் மன்றத்தின் கன்னியாகுமரி மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் அறிக்கை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பினார். இதை மறுத்து மாவட்டச் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், இச்செய்தி முற்றிலும் தவறானது; இதற்கும் ரஜினிக்கும் மக்கள் மன்றத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை எனக் கூறியிருந்தார். மேலும் ஆர்.எஸ்.ராஜன் சுயலாபத்திற்காக இவ்வாறு செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டியிருந்த அவர், ரஜினி யாருக்கும் வாய்ஸ் கொடுக்க மாட்டார் என்றார்.

‘பிப்ரவரி 15 வரை தான் ரஜினிக்கு டைம்’ – ‘தலைவருக்கு’ கெடு விதிக்கும் ‘நிர்வாகி’!

இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே ஆர்.எஸ்.ராஜன் ரஜினிக்கு கெடு விதித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர், “பிப்ரவரி 15ஆம் தேதி வரை பார்ப்பேன். ரஜினி கட்சி தொடங்காவிட்டால் நானே அவரது பெயரில் தொடங்குவேன். எப்போதும் ரஜினிகாந்த் நிச்சயம் முதல்வராவார். என்றைக்கு இருந்தாலும் கட்சி ஆரம்பிப்பேன் என ரஜினி சொல்லியிருந்தார். அவரது முடிவில் அவர் மாறினாலும் நான் மாறமாட்டேன். ரஜினி அரசியல் கட்சியைத் தொடங்குவார் என எனக்கு தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. மேலிடத்தில் உள்ளவர்கள் எல்லாம் சொல்கிறார்கள். நிச்சயமாக ரஜினிகாந்த் புதிய கட்சியை தொடங்குவார் என்கிறார்கள்.

‘பிப்ரவரி 15 வரை தான் ரஜினிக்கு டைம்’ – ‘தலைவருக்கு’ கெடு விதிக்கும் ‘நிர்வாகி’!

அவர் அரசியல் ஆலோசனையில் இருக்கிறார். முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்து வருகிறார். அவர் சந்திக்கும் முக்கியப் பிரமுகர்களும் என்னிடம் அவர் நிச்சயம் கட்சியை தொடங்குவார் என்கிறார்கள். லேட்டானாலும் லேட்டஸ்ட்டாக தலைவர் வருவார். அவர் ஆரம்பிக்காவிட்டால் பிப்ரவரி மாத கடைசியில் நானே நிச்சயமாக அவர் பெயரில் கட்சி ஆரம்பிப்பேன்” என்று பேசியுள்ளார்.

‘பிப்ரவரி 15 வரை தான் ரஜினிக்கு டைம்’ – ‘தலைவருக்கு’ கெடு விதிக்கும் ‘நிர்வாகி’!

இதே ஆர்.எஸ்.ராஜன் கடந்த நான்கு நாட்களுக்கு முன் வெளியிட்ட அறிக்கையில், “ரஜினி கட்சி தொடங்காத நிலையில் நாங்களே கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து புதிய கட்சி தொடங்கியுள்ளோம். அனைத்து இந்திய ரஜினி மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி தொடங்கி, அரசியலில் குதித்து மக்கள் சேவைகள் செய்ய முடிவு செய்துள்ளோம்” என்று கூறியிருந்தது கவனித்தக்கது. எல்லாவற்றையும் தயாராக வைத்துக்கொண்டே தொடர்ந்து இதுபோன்று அறிக்கைகளையும் வீடியோக்களையும் வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார். மன்ற தலைமையின் நடவடிக்கை விரைவில் ராஜன் மீது பாயும் என விஷயம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.