நவ.26 பொது வேலைநிறுத்தம் – தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்கம் பங்கேற்பு

 

நவ.26 பொது வேலைநிறுத்தம் – தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்கம் பங்கேற்பு

கன்னியாகுமரி

நாடு முழுவதும் வரும் 26ஆம் தேதி நடைபெறும் பொது வேலைநிறுத்த போராட்டத்தில், தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்கம் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள சிஐடியு அலுவலகத்தில், இன்று தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் மாநில குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கடல் மற்றும் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் மீன்வள மசோதா 2020-ஐ வாபஸ் பெற வலியுறுத்தியும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், நவம்வர் 26இல் நடைபெறும் பொதுவேலை நிறுத்தத்தில் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தமிழகத்தில் அரசு மீனவ பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து, மீனவ பகுதிகளில் வாழும் மீனவர்களின் உண்மையான கணக்கெடுப்பை நடத்தவும், தேங்காய்ப்பட்டனம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களின் உயிர் பலியையும், உடமை சேதத்தையும் தடுக்க நடவடிக்கை எடுக்க கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.